முகத்தை என்றும் பொலிவாக வைத்துக்கொள்வதற்க்கான பியூட்டி டிப்ஸ்..!

Advertisement

Skin Brightening Face Pack in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக பெண்கள் சரும அழகை மேம்படுத்த பலவகையான பியூட்டி டிப்ஸினை பாலோ செய்கின்றன. அதன் வரிசையில் பலர் முகம் பொலிவாக வைத்துக்கொள்ள பலவகையான டிப்ஸினை பாலோ செய்கின்றன இருந்தாலும் அதற்கு முழுமையான ரிசல்ட் கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். அதாவது இன்றுநாம் முகம் பொலிவாக இருக்க சில பியூட்டி டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்னென்ன பியூட்டி டிப்ஸ் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tomato instant Skin Brightening Face Pack:

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – ஒரு ஸ்பூன்
  • கான்பிளவர் மாவு – ஒரு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 3 துளிகள்
  • காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
  • தக்காளி சாறு – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கடலை மாவு ஒரு ஸ்பூன், கான்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு மூன்று துளிகள், தக்காளி சாறு இரண்டு ஸ்பூன் மாறும் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

பிறகு இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து, பின் 20 நிமிடம் காத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவாக காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Skin Brightening Face Pack:

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 2 ஸ்பூன்
  • கஸ்தூர் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்
  • தயிர் –  3 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

ஒரு பவுலில் கடலை மாவு 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் தயிர் மூன்று ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இப்பொழுது பேஸ் பேக் தயார். இந்த பேஸ் பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் காத்திருக்கவு. 20 நிமிடம் கழித்து முகத்தை குளிந்த நீரால் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் முகம் பிரைட்டாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புருவங்கள் அழகாக இருக்க இந்த 5-யில் ஏதவாது ஒன்றை ட்ரை செய்து பாருங்கள்

Coffee Skin Brightening Face Pack:

தேவையான பொருட்கள்:

  • காபி தூள் – 2 ஸ்பூன்
  • கடலை மாவு – 1 ஸ்பூன்
  • தயிர் – 3 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 3 துளிகள்

பயன்படுத்தும் முறை:

ஒரு பவுலில் காபித்தூள் 2 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன், தயிர் 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு 3 துளிகள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். பிறகு இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மேலும் முகம் பொலிவுடன் காணப்படும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement