கற்றாழையுடன் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவுங்க…! அப்பறம் தெரியும் உங்க முகம் எப்படி வெள்ளையாக மாறியது என்று..

Advertisement

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்

யாருக்கு தான் முகம் வெள்ளையாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. எல்லோருடைய மனதிலும் ஏதோ ஒரு ஓரத்தில் இந்த ஆசை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த ஆசையை நீங்கள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்தால் மட்டுமே போதும். ஏனென்றால் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய கற்றாழையில் வெறும் 2 பொருட்களை மட்டும் கலந்து முகத்தில் அப்ளை செய்து முகத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று தான் பார்க்போகிறோம். மேலும் இதற்கு நீங்கள் எந்த விதமான செலவும் செய்ய வேண்டாம். சரி வாங்க எப்படி முகத்தை வெள்ளையாக மாற்றுவது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Skin Whitening Natural Face Pack:

 கற்றாழையில் கால்சியம், பொட்டாசியம், குளோரின், சோடியம், வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற பல சத்துக்கள் நிறைந்த உள்ளது. 

ஆகையால் இந்த கற்றாழையை வைத்து முகத்திற்கு Face பேக் தயார் செய்து அப்ளை செய்தால் முகம் வெள்ளையாக மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை- சிறிய துண்டு 
  • தக்காளி- 1/2 துண்டு 
  • அரிசி மாவு- 2 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 

இதையும் படியுங்கள்⇒ 3 வாரங்களில் வழுக்கை தலையிலும் முடி வளரும் இதை செய்தால் ..

முகம் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும்:

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்

கற்றாழை ஜெல் தயார் செய்தல்:

முதலில் எடுத்துவைத்துள்ள கற்றாழையினை சுத்தமாக தண்ணீரில் அலசி வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த கற்றாழையில் இருந்து 2 ஸ்பூன் அளவிற்கு ஜெல் எடுத்து வைத்து விடுங்கள்.

தக்காளியில் சாறு தயாரித்தல்:

அடுத்து 1/2 துண்டு தக்காளியினை கேரட் துருவம் கட்டையில் வைத்து தேய்த்தால் போதும் உங்களுக்கு பேஸ்ட் போல கிடைத்து விடும்.

இப்போது அந்த பேஸ்டை வடிகட்டி வைத்து வடிகட்டி ஒரு பவுலில் வைத்து கொள்ள வேண்டும்.

பவுலில் பொருட்களை சேர்த்தல்:

அதன் பிறகு ஒரு பவுலில் தக்காளி சாறு, அலோவேரா ஜெல் 2 ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து வைத்து கொள்ளுங்கள்.

கடைசியாக மஞ்சள் தூள் சேர்த்தல்:

கடைசியாக பவுலில் இருக்கும் பொருளுடன் 5 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து அப்படியே வைத்து விடுங்கள். அவ்வளவு தான் கற்றாழை Face பேக் தயார். வாருங்கள் அப்ளை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ 7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும்

Face பேக் அப்ளை செய்தல்:

முகம் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும்

முதலில் உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை ஒரு காட்டன் துணி வைத்து அப்ளை செய்து விட்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். இதனை மட்டும் செய்தால் போதும் முகம் வெள்ளையாக மாறிவிடும். 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement