முகத்தை ஜொலிக்க செய்யும் இந்த தக்காளி பேஷியல்..!

Advertisement

தக்காளி அழகு குறிப்பு..! Skin Whitening Tomato Facial at Home..!

Tomato Facial at Home in Tamil:- வணக்கம் தோழிகளே இன்றைய பதிவில் தக்காளி ஜூஸை பயன்படுத்தி சரும அழகை வசீகரமாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தக்காளியில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள பருக்கள், மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும் தன்மை கொண்டது. எனவே இந்த தக்காளி ஜூஸுடன் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சேர்த்து முகத்திற்கு தக்காளி பேஷியல் எப்படி செய்யலாம் என்று படித்தறியலாம் வாங்க.

சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..! 

Tomato Facial at Home in Tamil..!

tomato facial at home in tamil

Step: 1 Face Cleansing:

முதலில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்ற Cleansing செய்யலாம். அதற்கு ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின் முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் காத்திருக்கவும், பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் இருக்கும் அழுக்குள் அகன்று சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும்.

Step: 2 Face Scrubbing:

Cleansing செய்த பிறகு அடுத்ததாக முகத்திற்கு Scrubbing செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை இவற்றை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் ஒரு தக்காளி பழத்தினை எடுத்து இரண்டாக கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

பின் இந்த தக்காளி பழத்தை கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையில் டிப் செய்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு 5 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கபடுகிறது, மேலும் சருமத்திற்கு ஒரு அருமையான க்ளோயிங் கிடைக்கும்.

Last Step: 3 Face Pack:

இறுதியாக சருமத்திற்கு ஒரு Face Pack போட்டுவிடலாம், இதற்கு ஒரு தக்காளி பழத்தினை எடுத்து நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் 2 அல்லது 3 ஸ்பூன் கடலை மாவு, 1/2 ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது face pack தயார்.

இதனை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின் 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு சருமத்திற்கு பேஸ் பேக் போடுவதினால் சருமத்தில் உள்ள பருக்கள், கருவளையங்கள், இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் அனைத்தும் அகன்று சருமம் என்றும் பளிச்சென்றும் மற்றும் பொலிவுடனும் காணப்படும்.

இந்த தக்காளி பேசியலை வாரத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வரலாம் இதன் மூலம் இயற்கையாகவே தங்களுடைய சரும அழகை அதிகரிக்கலாம், மேலும் முகம் என்றும் வசீகரமாக மற்றும் இளமையாக காணப்படும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement