இளமை குறையாமல் என்றென்றும் முகம் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க ..!

Advertisement

முகம் பளபளப்பாக என்ன செய்வது

ஆண், பெண் யாராக இருந்தாலும் சரி என்றும் இளமை குறையாமல் முகம் பளபளப்பாக அழகில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். அதற்காக பார்லருக்கு சென்றும் சிலர் வீட்டில் இருந்தும் நிறைய வகையான கிரீம்களை முகத்தில் அப்ளை செய்வார்கள். ஆனால் அவை எல்லாம் முகத்தை பளிச்சென்று மாற செய்யுமா என்ற குழப்பதுடன் முகத்தில் அந்த கிரீம்களை போடுவார்கள். இனி நீங்கள் இது மாதிரியான குழப்பத்துடன் கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டாம். வீட்டில் இருக்கும் 3  பொருட்களை வைத்து முகத்தை பளபளக்க செய்யவும் மற்றும் என்றும் இளமை குறையாமல் அப்படியே இருக்கவும் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து உங்கள் வீட்டில் இதை ட்ரை செய்து பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு காசு கொடுத்து ஹேர் டை வாங்காதீங்க.! இந்த மாதிரி ஹேர் டை பயன்படுத்துங்க

முகத்திற்கு தக்காளி:

முகத்திற்கு தக்காளி

உங்களுடைய முகத்தை பளபளக்க செய்வதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியை வைத்து Face பேக் தயார் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தக்காளி Face Pack செய்ய தேவையான பொருட்கள்:

  1. தக்காளி- 3
  2. காய்ச்சாத பால்- 1/2 டம்ளர்
  3. ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் 

என்றும் இளமையாக இருக்க:

tomato face pack in tamil

ஸ்டேப்- 1

முதலில் நன்கு பழுத்த 3 தக்காளி பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு 3 தக்காளியையும் தண்ணீரில் அலசி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது அரைத்த அந்த பேஸ்டை வடிகட்டி வைத்து நன்றாக வடிகட்டி ஒரு சின்ன பாத்திரத்தில் தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்-3 

இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டுடன் 1/2 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்து பிறகு தக்காளி மற்றும் பால் கலந்த பேஸ்டுடன் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்கள் முகத்திற்கு தக்காளி Face பேக் ரெடி.

ஸ்டேப்- 5

கடைசியாக நீங்கள் தயாரித்த தக்காளி Face பேக்கை இரவு தூங்க போக்குவதற்கு முன்பு உங்களுடைய முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

ஸ்டேப்- 6

20 நிமிடம் கழித்து முகத்திற்கு சோப் உபயோகப்படுத்தாமல் முகத்தை கழுவி விடுங்கள். இது மாதிரி வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்ய வேண்டும். இந்த தக்காளி Face பேக்கை முகத்தில் அப்ளை செய்ததால் முகம் பளபளப்பாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

இது முகத்தை பளபளக்க செய்வதோடு மட்டும் இல்லாமல் எண்ணெய் பசையை நீங்கவும் மற்றும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றவும் பயன்படுகிறது. (குறிப்பு: தக்காளி முகத்திற்கு அப்ளை செய்தால் அலர்ஜி வரும் நண்பர்கள் இந்த பேக்கை பயனபடுத்த வேண்டாம்)

இதையும் படியுங்கள் ⇒ 5 நிமிடத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நரை முடியை கருப்பாக மாற்றலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement