Thulasi Ilai Beauty Tips in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் துளசி இலையை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். துளசி இலையில் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த துளசி சளி மற்றும் இருமலை போக்கும் வல்லமை படைத்த ஒரு சிறந்த மூலிகை ஆகும். இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த துளசி இலை உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி முக அழகையும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த துளசி சருமப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. அதுபோல இன்று நம் பதிவில் துளசி இலையில் ஒளிந்திருக்கும் அற்புதமான அழகு குறிப்புகள் பற்றி தான் பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து துளசி இலை அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
இதையும் பாருங்கள் ⇒ கோதுமை மாவில் மறைந்துள்ள ரகசிய அழகு குறிப்புகள்
துளசி இலை அழகு குறிப்புகள்:
துளசி இலை சருமப் பிரச்சனைகளை போக்கும் வல்லமை படைத்தது. இது முக கருமையை நீக்க உதவுகிறது. இந்த துளசி முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முக தழும்புகள் மறைய உதவுகிறது.
டிப்ஸ் – 1
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது போல வாரம் 3 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்களை போக்குவது மட்டுமின்றி இனிமேலும் பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும், பருக்களால் வந்த தழும்புகளும் மறையும்.
டிப்ஸ் – 2
1 கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த துளசி நீரை வடிகட்டி அதை நன்கு குளிர வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரால் முகத்தை கழுவுங்கள். தினமும் இதுபோல முகத்தை கழுவி வருவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
டிப்ஸ் – 3
துளசி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதுபோல வாரம் 2 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குகிறது. எண்ணெய் பசை காரணமாக முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.
டிப்ஸ் – 4
துளசி இலைகளை நன்கு கொதிக்க வைத்து பின் அந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் சந்தனம் வைத்து அதனுடன் இந்த துளசி நீரை சேர்த்து கலந்து அதை முகத்திற்கு பேஸ் பேக் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதுபோல செய்து வருவதால் முகம் பொலிவு பெரும். முகம் பளபளப்பாக இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |