White Hair Solution in Tamil
நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால் தலை முடி தான். இந்த தலை முடி பிரச்சனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் உள்ளது. அது என்னவென்றால் பொடுகு பிரச்சனை, தலை முடி உதிர்வு பிரச்சனை, நரை முடி என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் வருகிறது அல்லவா..? அதற்கு நாம் என்ன செய்வது என்று கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி இன்னும் தலை முடிக்கு பிரச்சனையை தான் கொடுக்கிறோம். அப்படி நாம் செய்யும் தவறுகள் உங்கள் முடியை இன்னும் கெட்டுப்போக வைக்கும் தவிர வளரவிடாது. அந்த கெமிக்கல் ஆனாது முடி கருமையாக இருந்தாலும் அதை இன்னும் நரை முடியாக மாற்றும்.
இதற்கு என்ன தீர்வு என்றால் கடையில் விற்கும் கெமிக்கல் உள்ள ஷாம்பு சீயக்காய், எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதேபோல் எப்போதும் தலையை குளித்து அதனை காயவிடாமல் பின்னி போட்டால் அது இன்னும் தலைமுடிக்கு கேடு தரும்..! இன்னும் நிறைய முடியை பாதுகாப்பதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். சரி அதற்கு முன் உங்கள் நரை முடியை அடியிலிருந்து கருமையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
White Hair Solution At Home in Tamil:
- முதலில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை மட்டும் எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். அதனை அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் எடுத்துக் கொள்ளவும். அதில் நமக்கு வெங்காயம் தேவையில்லை வெங்காய தோல் மட்டும் போதும். வெங்காய தோல் மட்டும் பிரிக்காமல் கொஞ்சம் வெங்காய சதையுடன் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இந்த இரண்டு பொருளையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கழுவினால் தான் வெங்காயத்தோலில் உள்ள கருமை போகும். ஆகவே அதை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
ஒருமுறை இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறும்
அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அதில் கழுவி வைத்துள்ள கருவேப்பிலை, வெங்காய தோல் இரண்டையும் அதில் போடவும். அடுத்து அது நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கவிட்ட பிறகு அதை ஆறவிட்டு தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் அந்த கொதித்த தண்ணீர் அப்படியே விட்டு ஷாம்பு போட்டு குளிக்கலாம் அல்லது அப்படியே கூட குளிக்கலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |