நினைத்தது உடனே நடக்க மந்திரம்..!

Ninaithathu Nadakka Manthiram

நினைத்தது உடனே நடக்க

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே ஆசை என்னும் உணர்வு அதிகமாகவே இருக்கும். எதற்கும் ஆசைப்படாத மனிதனை ஞானி என்று தான் சொல்ல வேண்டும். ஆசைப்படாத மனிதர்களை கண்டிப்பாக இந்த உலகத்தில் பார்க்க முடியாது. ஒவ்வொருத்துவங்களுக்கு ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதாவது படிக்கும் பிள்ளைகளாக இருந்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். படித்து விட்டு வேலை தேடும் நபராக இருந்தால் நாள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வேலைக்கு செல்லும் நபராக இருந்தால் மேலும் நல்ல பதவிக்கு செல்லவேண்டும். கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இது மாதிரி அனைவருக்குமே ஆசைகள் என்று நிறைய இருக்கும். ஆனால் யாருக்குத்தான் மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறியிருக்கிறது சொல்லுங்கள். நாம் ஒன்று நினைத்திருப்போம் அது ஒன்று நடந்து முடிந்திருக்கும் இது அனைவருக்குமே பொருந்தும். சரி நாம் மனதில் நினைக்கும் சில விஷயங்களாவது நிறைவேற சில மந்திரங்கள் இருக்கிறது. அவற்றை நாம் தினமும் சொல்லி வந்தோம் என்றால் நிச்சயம் ஒருநாள் அது நடக்கும். சரி வாங்க அந்த மந்திரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

ஸ்ரீ ராம ஜெயம்:

நீங்கள் நினைத்தது உடனே நடக்க இந்த மந்திரத்தை 108 முறை சொல்லனால் போதும் அல்லது எழுதினால் போதும் நீங்கள் மனதில் நினைக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் கூடிய விரைவில் வெற்றி பெரும்.

நீங்கள் முதல் முதலாக இந்த மந்திரத்தை எழுதப்போரிங்க அப்படினா நல்ல நாளில் எழுதுவது சிறந்து. அதுவும் நவமியாக இருந்தால் மிகவும் சிறந்தது இல்லையென்றால் நீங்கள் சனி கிழமையில் கூட இந்த மந்திரத்தை எழுத ஆரம்பிக்கலாம். குறிப்பாக இதற்கென்று ஒரு புதிய நோட்டில் எழுதுங்கள். தினமும் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை வாரத்தில் ஒருமுறை அதுவும் சனிக்கிழமையில் எளிதினாலே போதும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள்–> பணம் சம்பாதிக்க மந்திரம்

(அல்லது)

நினைத்தது உடனே நடக்க மந்திரம் – Ninaithathu Nadakka Manthiram:

ஓம் கிலி சிங் – ஓம் ரீங் அங்
ஓம் ஸ்ரீ கிலி – ஓம் கிலி சங்
ஓம் ரீங் கிலி – ஓம் ஸ்ரீ ரீம்
ஓம் ரீங் அம் – ஓம் கிலி அங்!

இந்த மந்திரத்தை காலை சூரிய உதயத்திற்கு முன்பு, 27 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்துப் பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

(அல்லது)

இதையும் கிளிக் செய்யுங்கள்–> நவகிரக மந்திரம் சொன்னால் நன்மைகள் நடப்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்

விநாயகர் சக்தி மந்திரம்:

ஈம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கம் ஐம்
கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
வரேண்யம் கணபதயே க்லீம்!

ஹசககல ஹரீம்
பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு சஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத் சர்வ
ஐனம்மே வசமானய ஸ்வாஹா!!

இதையும் கிளிக் செய்யுங்கள்–> வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்