எவ்வளவு பெரிய கஷ்டமும் நீங்கி பணவரவு செழிக்க அரிசி பானையில் இதை வைத்தால் போதும்..!

Pana Varavu Pariharam

மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்பம் மற்றும் துன்பம் இந்த இரண்டும் நிறைந்த ஒன்று தான் வாழ்க்கையாக இருக்கிறது. அதேபோல் தான் கஷ்டங்களும். இந்த உலகலத்தில் கஷ்டம் மற்றும் கடன் இல்லாமல் யாருமே இல்லை. அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கஷ்டங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் சிலருக்கு இத்தகைய கஷ்டங்கள் கொஞ்சம் பெரிய அளவில் காணப்படும். இதன் விளைவாக வீட்டில் பணம் என்பதே தங்காமல் செலவுகள் அதிகரித்து கொண்டே போகும். இவற்றை எல்லாம் நீங்கி பணவரவு அதிகரிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் நம்மில் சிலர் யோசித்து இருப்போம். இதுபோல யோசிப்பவர்கள் அனைவருக்கும் இன்றைய ஆன்மீக பதிவானது மிகவும் பயனளிக்கூடியதாக இருக்கும். அந்த வரிசையில் இன்று வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வம் செழித்து இருக்க என்ன பரிகாரம் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்

பணம் சேர பரிகாரம்:

வீட்டில் இருக்கு அரிசி பானையில் சில பொருட்களை வைத்தால் போதும் வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் பணம் சேரும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

  • பச்சை நிற ஏலக்காய்- 5
  • 1 ரூபாய் நாணயம்- 11
  • புணுகு- சிறிதளவு
  • ஜாதிக்காய்- 3
  • பச்சை அரிசி- 1 கைப்பிடி 
  • கண்ணாடி பாட்டில்- 1
  • காட்டன் துணி- மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் 

பணம் சேர பரிகாரம் செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் முறை:

பரிகாரம் செய்யும் முறை

பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதுபோல புணு என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இப்போது எடுத்துவைத்துள்ள 11 ரூபாய் நாணயங்களின் மீது புணுகை சிறிதளவு தொட்டு அதன் மேலே தடவி கொள்ளுங்கள். 

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள துணியில் புணுகு தடவிய நாணயம், ஏலக்காய், ஜாதிக்காய் என இவை அனைத்தினையும் அதில் வைத்து நன்றாக முடிச்சு போட்டு கொண்டு கண்ணாடி பாட்டிலின் உள்ளே வைத்து விடுங்கள்.

அடுத்ததாக அந்த கண்ணாடி பாட்டிலின் மேலே பச்சை அரிசியினை வைத்து மூடி போட்டு மூடி விடுங்கள். இப்போது பரிகாரம் செய்ய தயார் செய்து வைத்துள்ள தந்தீரகத்தை உங்களுடைய வீட்டில் யார் அதிகமான சம்பளம் பெறுகிறார்களோ அவர்கள் தூங்கும் இடத்திற்கு அருகில் இடைவெளி விட்டு ஒரு மேசை அல்லது நாற்காலியின் மீது வைத்து விடுங்கள்.

பின்பு வீட்டில் விளக்கேற்றி சாமியை வழிபடுங்கள்.

பணம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரம் செய்வதால் பணம் நிறைய சம்பாதிப்பவர்களின் படுக்கைக்கு அருகில் வைப்பது சிறந்தது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் 48 நாட்களுக்கு அதனை தொடவே கூடாது.

உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்

பரிகாரம் செய்ய உகந்த நாள்:

 பணம் சேர பரிகாரம்

இத்தகைய பரிகாரத்தை வெள்ளி கிழமை, பெளர்ணமி வரும் நாட்கள் அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்கள் மற்றும் சதுர்த்தி நாட்கள் என இதுபோன்ற நாட்களில் தான் செய்ய வேண்டும்.

அதேபோல் காலை 4 மணி முதல் 5 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்யும் போது அசைவம் சாப்பிடக்கூடாது. மேலும் 48 நாட்கள் கழித்து அந்த கண்ணாடி பாட்டிலில் இருக்கும் ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை தண்ணீரில் விட்டு விட்டு, அரிசியினை எறும்புகளுக்கு கொடுத்து விடுங்கள்.

பரிகாரத்தை செய்து முடித்ததோடு மட்டும் இல்லாமல் பணம் பெருகுவதற்கான முயற்சியினையும் செய்ய வேண்டும்.

💁‍♀️வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்