விளக்கு திரி வகைகள் மற்றும் பலன்கள் | Thiri Varieties & Uses in Tamil

Advertisement

விளக்கு திரி வகைகள் | Vilakku Thiri Vagaigal

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் விளக்கு திரி வகைகள் (Vilakku Thiri Vagaigal) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். அனைவரது வீட்டிலுமே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை விளக்கு ஏற்றி கடவுளை வேண்டுவது உண்டு. அதிலும் கட்டாயமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றுவோம். தீபத்தில் எரியும் ஜோதியில் கடவுள் இருப்பதாக ஐதீகம். அப்படி ஏற்றும் விளக்கில் எண்ணெய் மற்றும் திரி இரண்டையும் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் திரி வகைகள் மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

விளக்கு திரி வகைகள்| Types of Vilakku Thiri:

  1. பஞ்சு திரி
  2. தாமரை தண்டு திரி
  3. வெள்ளை எருக்கன் திரி
  4. சிகப்பு திரி
  5. மஞ்சள் திரி
  6. வெள்ளை திரி
  7. வாழைத்தண்டு திரி
  8. பச்சை நிற திரி

விளக்கு திரி பலன்கள் | Vilakku Thiri Palangal

பஞ்சு திரி:

விளக்கு திரி வகைகள்

  • விளக்கு திரி வகைகள்: இந்த திரியை கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் சகல செல்வங்களும், மகிழ்ச்சியும் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு இந்த திரி உதவுகிறது. இது இலவம் பஞ்சால் தயாரிக்கப்படுகிறது.

தாமரை தண்டு திரி:

Vilakku Thiri Palangal

  • Vilakku Thiri Palangal: தாமரை தண்டு திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். செய்வினை கோளாறு நீங்கும்.
  • தெய்வ குற்றம் நீங்கி குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். மகாலெட்சுமியின் தரிசனம் கிடைக்கும். பண பிரச்சனை நீங்கும்.

வெள்ளை எருக்கன் திரி: 

விளக்கு திரி பலன்

  • Thiri Varieties & Uses in Tamil: வீட்டில் பணக் கஷ்டம் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வெள்ளை எருக்கன் திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
  • விநாயகரின் பரிபூரண அருள் கிடைப்பதற்கு இந்த திரி உதவும். உங்கள் வளர்ச்சியை தடுப்பதற்காக செய்யப்படும் செய்வினை கோளாறுகள் நீங்கும். தீய சக்தி, கெட்ட கனவு, சூன்யம் போன்ற எதுவும் வீட்டிற்குள் நுழையாது.

சிவப்பு திரி பலன்:

சிவப்பு திரி பலன்

  • Vilakku Thiri Palangal: நீண்ட நாட்களாக திருமணம் தடை ஏற்பட்டிருப்பவர்கள் இந்த சிவப்பு திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விலகி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் நலப்பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.

மஞ்சள் திரி:

Vilakku Thiri Vagaigal

  • விளக்கு திரி வகைகள்: குடும்பத்தில் அதிக அளவு சண்டையும், கருத்து வேறுபாடும் இருந்தால் மஞ்சள் திரியை வைத்து விளக்கு ஏற்றுவது நல்லது. இந்த திரியை வைத்து விளக்கு ஏற்றும் போது குடும்பத்தில் உள்ள சண்டைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும்.
  • இல்லற வாழ்க்கை நன்றாக இருக்க வீட்டில் அல்லது கோவிலில் அம்மன் கடவுளுக்கு மஞ்சள் திரியில் விளக்கு ஏற்றுவது நல்லது. கூடுதல் பலன்கள் கிடைக்க விளக்கு ஏற்றும் போது பஞ்சபூத எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

வெள்ளை திரி:

Thiri Varieties & Uses in Tamil

  • Thiri Varieties & Uses in Tamil: இந்த திரியை வைத்து விளக்கு ஏற்றினால் இல்லத்தில் சகல செல்வங்களும் குடி கொள்ளும்.
  • கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மற்றும் வேலை கிடைக்க வெள்ளை திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்.

வாழைத்தண்டு திரி:

Vilakku Thiri Vagaigal

  • Vilakku Thiri Vagaigal: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ இந்த திரியை பயன்படுத்தலாம். பித்ரு சாபம், குலதெய்வ சாபம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பச்சை நிற திரி:

Thiri Varieties & Uses in Tamil

  • விளக்கு திரி வகைகள்: கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பச்சை நிற திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். கடன் பிரச்சனைகள் தீர்ந்து, செல்வத்தின் வரவு வீட்டில் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.

எந்த கிழமைகளில் எந்த திரியை ஏற்றலாம்?

  • சிவப்பு திரியை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஏற்றவும்.
  • வெள்ளை திரியை திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் ஏற்றவும்.
  • பச்சை திரியை புதன் கிழமைகளில் ஏற்றவும்.
  • மஞ்சள் திரியை வியாழக்கிழமையில் ஏற்றவும்.
விளக்கு வகைகள்
விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திரங்கள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement