12 வகையான பொருத்த விளக்கம் பற்றி தெரியுமா?

12 Thirumana Porutham in Tamil

12 வகையான பொருத்த விளக்கம்| 12 Thirumana Porutham in Tamil

நண்பர்களே வணக்கம் பொதுவாக திருமணம் என்றால் பொருத்தம் பார்ப்பது அவசியம். அதேபோல் போல் திருமணத்திற்கு என்று முக்கிய பொருத்தம் பார்ப்பது அவசியம் அதில் 7 பொருத்தம் இருப்பது அவசியம். ஆனால் எப்போதாவது யோசித்தது உண்டா 12 வகையான பொருத்தம் இருக்கிறது இதனை எதற்கு பார்க்கிறார்கள். அதற்கு என்ன விளக்கம் என்று எப்போவது யோசித்தது உண்டா அப்படி யோசித்த அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். வாங்க இப்போ 12 பொறுத்த விளக்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

12 திருமண பொருத்தம்:

  1. தினப் பொருத்தம்
  2. கணப்பொருத்தம்
  3. மாகேந்திரப் பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்கம்
  5. யோனிப் பொருத்தம்
  6. இராசிப் பொருத்தம்
  7. இராசி அதிபதி பொருத்தம்
  8. வசியப் பொருத்தம்
  9. ரஜ்ஜிப்பொருத்தம்
  10. வேதைப் பொருத்தம்
  11. நாடிப் பொருத்தம்
  12. விருட்சப் பொருத்தம்.

தினப் பொருத்தம் விளக்கம்:

திருமண மணமக்களின் ஆரோக்கியத்தையம் ஆயுளையும் பற்றி தெரிந்துகொள்ள இந்த பொருத்தம் பார்க்கிறார்கள். இது முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

கணப்பொருத்தம் என்றால் என்ன:

இந்த பொருத்தமானது தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று கணங்களின் பொருத்தம் பார்ப்பார்கள். 27 ஏழு நட்சத்திரங்களில் மூன்று பிரிவுகளாக பிரித்து அதில் இந்த நட்சத்திரத்தில் இந்த ராசிகளுக்கு பொருத்தம் வகுத்துள்ளள்ளனர். அதற்காக காணபொருத்தம் பார்க்கிறார்கள்.

மகேந்திரப் பொருத்தம் விளக்கம்:

குடும்பத்தின் வளர்ச்சியை குறிக்கும் பொருத்தமாகவும்.

ஸ்திரீ தீர்க்கம்:

மணமக்கள் வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழ்வதற்கான பொருத்தம் பார்க்க ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்:

யோனி பொருத்தம் ஏன் பார்க்கிறார்கள் என்றால் திருமணத்திற்கு பிறகு இருவரின் தாம்பத்தியம் என்ன நிலையில் இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ராசிப் பொருத்தம்:

இந்த தலைமுறை விருத்தி அடையுமா என்று தெரிந்துகொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ராசி அதிபதி பொருத்தம்:

அடுத்த தலைமுறையும் அவர்களில் ஒற்றுமையையும் பற்றி தெரிந்துகொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

வசியப் பொருத்தம் என்றால் என்ன:

மனமக்களின் அன்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தமாகும்.

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன:

திருமணம் என்றால் இந்த பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் வாழ்வில் கஷ்டம் மற்றும் நஷ்டம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த பொருத்தமானது பார்க்கப்படுகிறது.

வேதைப் பொருத்தம்:

வாழ்வில் எந்த அளவிற்கு கஷ்டம் இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த பொருத்தம் தேவை ஆகும்.

நாடிப் பொருத்தம்:

இந்த பொருத்தமானது இருவர்களிடம் இருந்தால் தான் தலைமுறையாக வாழவும் வழிகாட்டவும் உதவுகிறது.

விருட்சப் பொருத்தம்:

மணமக்கள் இருவருக்கும் முக்கியமாக இருக்கவேண்டிய பொருத்தம் இதுவே குழந்தை பாக்கியத்தை குறிக்கும் ஆகவே இந்த பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் திருமணத்திற்கு தேவையான பொருத்தம் ⇒ முக்கிய திருமண பொருத்தம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்