தனுசு குணங்கள் | Dhanu Rashi Characteristics in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பதிவில் தனுசு ராசிக்கார்களின் குணாதிசயங்களை பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அதில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது தான் தனுசு ராசி ஆகும். தனுசு ராசி மொத்தம் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது, மூலம், உத்திராடம், பூராடம் போன்ற நட்சத்திரங்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ராசியின் அதிபதியை பொறுத்துதான் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று கணிக்க முடியும், அந்த வகையில் தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். மேலும் இவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும், இவர்களுக்கு ராசியான நிறம், எண் மற்றும் பொருத்தமான ராசிகளை தெரிந்துகொள்வோம் வாங்க.
தனுசு ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர் யார்..? |
தனுசு ராசியின் குணங்கள்:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் உயரனமான உடல் அமைப்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் நடக்கும் பொழுது ஒரு பக்கம் சாய்ந்தது போலத் தான் நடப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆற்றல் என்ன வென்றால், எதிர் காலத்தில் நடக்க கூடிய விஷயங்களை முன்கூட்டியே அறியும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள், ஆனால் யாருக்கும் அடிமையாக மாட்டார்கள். இவர்கள் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவராக இருப்பார்கள்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக அனைவரையும் ஈர்க்க கூடியவர்களாக இருப்பார்கள், இவர்கள் ஒரு விஷயத்தை நினைத்து இறங்கி விட்டால், அதை முடிக்காமல் இருக்கவே மாட்டார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு தற்பெருமை அதிகமாகவே இருக்கும், இவர்கள் தன்னை தானே உயர்த்தி பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அதிக நண்பர்களையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் பொதுவாக எல்லா விஷயங்களிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் குருபகவானை அதிபதியாக கொண்டுள்ளதால், பணத்தை அதிகமாக விரும்ப மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு கோவம் அதிகமாகவே வரும், கோவம் வந்தால் சத்தமாக பேசுவார்கள்.
இவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார்கள், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்களை யாரையாவது தவறுதலாக பேசினால், யார் என்று கூட பார்க்காமல், அவர்களை விட்டு விலகி விடுவார்கள். ஆனால் இவர்கள் எதிலும் தோல்வி அடைந்தால் , எளிதில் துவண்டு விடுவார்கள்.
அதிர்ஷ்ட பலன்கள்:
தனுசு ராசி அதிர்ஷ்ட எண்: 3, 12, 21 போன்ற கூட்டு எண்கள்.
தனுசு ராசி அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, வெளிர் நீலம், வெளிர் பச்சை போன்ற நிறங்கள் அதிர்ஷ்டம் தரும்.
தனுசு ராசி அதிர்ஷ்ட கல்: கனக புஷ்பராகம்
தனுசு ராசி அதிர்ஷ்ட திசை: தெற்கு திசை
தனுசு ராசி அதிர்ஷ்ட கடவுள்: குருபகவான்
தனுசு ராசி நட்சத்திரம் பெயர்கள்: யே, யோ, பா, பீ
தனுசு ராசி திருமண வாழ்க்கை |
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |