கோவிலுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

don't do this mistakes while going for temple in tamil

Do This Before You Enter Into Temple in Tamil 

அன்பு நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் கோவிலுக்கு செல்லும் போது செய்ய கூடாத தவறுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இன்றைய காலகட்டம் எவ்வளவு மாறி இருந்தாலும் ஆன்மீகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் மாறாமல் இருக்கிறது. அனைத்து மக்களுமே கோவில்களுக்கு செல்வார்கள். அதுபோல நாம் கோவிலுக்கு செல்லும் போது நம்மை அறியாமல் சில தவறுகளை செய்கின்றோம். அப்படி நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.?

கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள்:

 don't do this mistakes while going for temple in tamil

குளிக்காமல் கோவிலுக்கு செல்லலாமா..? 

ஆண், பெண் குளிக்காமல் கோவிலுக்கு செல்ல கூடாது. அதுபோல மதிய நேரங்களில் தூங்கி விட்டு குளிக்காமல் கோவிலுக்கு செல்ல கூடாது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் குளிக்க கூடாது.

அதுபோல கோவிலுக்கு செல்லும் போது வீட்டையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் அசைவம் சமைத்து சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்ல கூடாது.

கோவிலுக்கு செல்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கோவிலுக்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். கோவிலில் வைத்து யாரிடமும் சண்டை போடக் கூடாது.

பெண்கள் எப்படி கோவிலுக்கு செல்ல வேண்டும்:

பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பின் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் கோலம் போடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோவிலுக்கு செல்ல கூடாது.

பெண்கள் முடியை விரித்து போட்டு கொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது. அதுபோல பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் இல்லாமல் கோவிலுக்கு செல்ல கூடாது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது.

அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

கடன் வாங்கி கொண்டு கோவிலுக்கு செல்லலாமா..?  

அதுபோல கோவிலுக்கு செல்லும் போது யாரிடமும் கடன் வாங்கி கொண்டு செல்ல கூடாது. கோவில் உள்ளே சென்று விட்டு வெளியில் வரும் போது யாருக்கும் தர்மம் செய்யக் கூடாது.

கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு கோவிலில் படுத்து உறங்க கூடாது. அதுபோல கோவிலை சுற்றி வலம் வரும் போது வேகமாக வர கூடாது.

கோவிலில் பிரசாதமாக கொடுத்த பூக்களை நமது பூஜை அறையில் இருக்கும் சாமி படங்களுக்கு வைக்க கூடாது.

வாசனை இல்லாத மலர்களை கோவிலுக்கு எடுத்து செல்ல கூடாது. அதேபோல வீட்டிலும் வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்ய கூடாது.

இதுபோன்ற தவறுகளை கோவிலுக்கு செல்லும் போது செய்யாதீர்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்