வீட்டு சுவரில் எதை மாட்டினால் அதிர்ஷ்டம் எதை மாட்டினால் துரதிஷ்டம் தெரியுமா?

Advertisement

வீட்டின் சுவற்றில் எதை மாட்டலாம்? எதை மாட்ட கூடாது?

Don’t Hang This On The Wall Meaning in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில்.. நாம் ஒரு அருமையான ஆன்மிக தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதவது நமது வீட்டில் சுவற்றில் எது மாதிரியான பொருட்களை கட்டாயம் மாட்டவே கூடாது மற்றும் எதையெல்லாம் வீட்டின் சுவற்றில் வைக்கலாம், அதன் மூலம் கிடைக்கும் பலன்களை பற்றி இப்பதிவில் நாம் பார்த்துவிடலாம் வாங்க.

வீட்டு சுவரில் எதை மாட்டினால் அதிர்ஷ்டம் எதை மாட்டினால் துரதிஷ்டம் தெரியுமா?

எந்த பொருட்களை மாட்ட கூடாது? | Don’t Hang This On The Wall Meaning in Tamil

பொதுவாக வீட்டின் சுவற்றில் ஆயுதங்களை மாட்டவே கூடாது,

போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள் வீட்டின் சுவரில் மாட்ட கூடாது.

பொம்மை பீரங்கியை சுவற்றில் மாட்ட கூடாது.

பெருக்கல் குறி போல் வாள்களை வைக்கக் கூடாது.

மிருகங்கள் வாயில் உணவை கவ்விக் கொண்டிருக்கும்படி இருக்கும் உருவப்படத்தை வைக்கக் கூடாது.

மான் படத்தை மாட்டி வைக்கலாம் – செல்வத்தை பெருக்கும். ஆனால் மான் தலையை கொம்புடன் வைக்கக் கூடாது.

எந்த பொருட்களை மாட்டலாம்?

போர் வீரன், போர் விமானம் ஆகியவற்றை வீட்டின் சுவற்றில் வைக்கலாம்.

சீனர்களின் டிராகனை வீட்டின் சுவற்றில் வைக்கலாம் இதனால் வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும்.

இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். இவை வீட்டில் உள்ளவர்களுடன் எப்பொழுதும் ஒற்றுமையை மேம்படுத்தும்.

யானை-பலம், அறிவு, சக்தி இவற்றைக் குறிக்கும். இதை கிழக்கில் வைக்கலாம். யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போல் அமைய வேண்டும்.

அதேபோல் வீட்டில் உள்ள நபர்களின் புகைப்படம், குடும்ப புகைப்படம் போன்றவற்றை வீட்டு சுவற்றில் மாட்டலாம்.

மேலும் கடவுளின் புகை படங்களை மாட்டலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement