பணம் மலை போல் குவிய ஏலக்காயை இப்படி வைத்து பாருங்கள்..!

Advertisement

பணவரவுக்கு என்ன செய்ய வேண்டும்

வீட்டில் இரண்டு பேரும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் வாங்கிய சம்பளம் இடம் தெரியாமல் போய் விடுகின்றது. அதுமட்டுமில்லாமல் பணத்திற்கான செலவு வந்த கொண்டே இருக்கும். பணவரவு அதிகரிக்க இந்த பதிவில் கூறியுள்ள பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் ஆன்மிக அடிப்படையில் பணவரவை அதிகரிக்க செய்ய முடியும். அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பணவரவை அதிகரிக்க இந்த பதிவில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பணவரவு அதிகரிக்க பரிகாரம்:

ஏலக்காய் பரிகாரம்

பணவரவு அதிகரிக்க பரிகாரம் செய்வதற்கு காய்ந்த மருதாணி விதைகள், 6 ஏலக்காய், 6 பச்சை கற்பூரம், 9 நாணயங்கள் தேவைப்படும்.

அடுத்து பச்சை நிற துணி 2 எடுத்து அதன் உள்பக்கத்தில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை வைத்து கட்டி கொள்ளவும். தனித்தனியாக இரண்டு மூட்டை கட்டி கொள்ளவும்.

ஏலக்காய் பரிகாரம்

இந்த ஒரு மூட்டையை வீட்டின் நிலை வாசற்படியில் வெளியே கட்டி கொள்ளவும். எடுத்துக்காட்டிற்கு எலுமிச்சை பழம் அல்லது தேங்காய் கட்டுவோம் அல்லவா.! அது போல கட்டி கொள்ளவும்.  இன்னொரு மூட்டையை பணத்தை எங்கு வைப்பீர்களோ அந்த இடத்தில் வைத்து கொள்ளவும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!

வியாபாரம் செய்யும் இடம்  மற்றும் அலுவலகம் போன்ற இடத்திலும் வாசல் நிலைப்படி மற்றும் பணம் வைக்கும் இடம் இரண்டிலும் செய்து வைத்துள்ள மூட்டையை கட்டி விடவும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் மட்டும் தான் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் காலை 06.00 மணி முதல் 07.00 வரை செய்ய வேண்டும்.

அதுவே பௌர்ணமி அன்று செய்தால் மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செய்யலாம்.

மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதில் உள்ள பொருட்களை ஆற்றில் விட்டு விட வேண்டும். மறுபடியும் இந்த பரிகாரத்தை செய்வதற்கு பொருட்கள் புதியதாக இருக்க வேண்டும். துணியும் புதியதாக இருக்க வேண்டும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement