இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..? | How to Find Death Tithi in Tamil

How to Find Death Tithi in Tamil

இறந்த திதி கண்டுபிடிப்பது எப்படி..? – How to find tithi for death anniversary in tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் திதி கணக்கிடப்படுவது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம். பொதுவாக இறந்தவர்களுக்கு என்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்றாலும் அதனை கணக்கிட்டு செய்வார்கள். அதில் அனைவரும் நினைத்து இருப்பது ஒரு வருடத்தில் அவர்கள் இறந்த தேதி வந்து விட்டால் அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இறந்த தேதிக்குள் திதி செய்ய தேதியை குறித்துக்கொடுப்பார்கள். இல்லையென்றால் அதற்கு பிறகு தேதி கொடுப்பார்கள் அதனை பற்றி அனைவரும் யோசித்து இருப்பீர்கள். அதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரியுமா.. அல்லது திதி பலன்களை பற்றி தெரியுமா அப்படி தெரியவில்லையேற்றல் பொதுநலம்.காம் பதிவில் இறந்த திதி பலன்களை பற்றி பதிவிட்டு உள்ளோம் அதனை படித்து தெரிந்துகொள்வோம். வாங்க இப்போது திதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று படித்தறிவோம்..!

திதிகளும் அவற்றின் பலன்களும்

இறந்தவர்களின் திதி கணக்கிடப்படுவது எப்படி?

பொதுவாக இறந்தவர்களின் திதியை கணக்கிடுவதற்கு ஜோதிடர்களை அணுகி அவர்களிடம் கேட்டுக்கொள்வார்கள், அப்படி இல்லையென்றால் ஐயர்களிடம் சென்று தேதியை குறித்து அந்த தேதியில் திதியை செய்வார்கள்.

திதி கொடுப்பதற்கு எதற்கு அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். நாமே தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்கள்  உறவுகளில் ஒருவருக்கு திதி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நாம் முதலில் கவனிக்க வேண்டிய மூன்று விஷயம் முதலில் அவர் இறந்த தமிழ் தேதி என்ன என்பதை கணக்கிட வேண்டும் மற்றோன்று வளர்பிறையா, தேய்பிறையா என்பதை பார்க்கவேண்டும், மூன்றாவதாக இறந்த தேதி அன்று என்ன திதி என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த மூன்றையும் வைத்து தான் இந்த வருடத்திற்கு எப்போது திதி வரும் என்பதை பார்க்க போகிறோம்.

இறந்த திதி கண்டுபிடிப்பது எப்படி

எடுத்துக்காட்டாக: 27.1.2021 தேதிலில் இறந்தவருக்கு திதி பார்க்க வேண்டும் என்றால்? மேல் கொடுக்கப்பட்ட கணக்கில் உள்ளது போல் மூன்றையும் ஞாபகத்தில் வைத்து குறித்துக்கொள்ளவும்.

27.1.2021 என்றால் அன்று தை 14, வளர்பிறை, சதுர்த்தசி என்றால் அவர்களுக்கு 2022 அன்று எப்போது திதி வரும் பார்ப்போம் வாங்க.

மறுவருடம் அதாவது 2022 வருடத்தில் என்ன தேதியில் திதி வரும் என்றால் நாம் குறித்துவைத்த மூன்றையும் எடுத்துக்கொள்ளவும்.

எந்த திதியில் என்ன செய்யலாம்..!

அதன் பின் தை மாதத்தில் சதுர்த்தசி வளர்பிறையில் வருவதை பார்க்கவும். அனைவரும் இந்த வளர்பிறையா தேய்பிறையா என்பதை மறந்து பிறையை மாற்றி திதி கொடுத்துவிடுவார்கள் அதனால் வளர்பிறையில் வரும் திதில் கொடுக்க வேண்டும்.

இறந்தவர்களின் திதி கணக்கிடப்படுவது எப்படி

மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் தான் திதி கணக்கிடப்படுகிறது. இதே போல் யாருக்கு திதி கொடுக்கும் நேரம் வரும் போது இது போன்று கணக்கிடப்பட்டு கொடுத்துவிடுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்