கடன் பிரச்சனை தீர
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய ஆன்மிகம் பதிவில் நாம் பார்க்க இருப்பது வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான். நமது அனைவரின் வீட்டிலேயும் கடன் அல்லது பண பிரச்சனை இருக்கும். இதனால் வீட்டில் மனநிம்மதியே இருக்காது. அப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் நன்மைகள் மற்றும் சந்தோசம் வந்து சேர இந்த பதிவில் உள்ளபடி பரிகாரம் செய்து பாருங்கள். அதன் பிறகு நிகழும் மாற்றத்தை நீங்களே காணலாம். சரி வாங்க அது என்ன பரிகாரம் அதனை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
வீட்டில் உள்ள கடன் பிரச்சனை நீங்க பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நல்ல நிலையில் உள்ள 21 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு ஊசியும் எடுத்து வைத்த ஏலக்காய்களை மாலையாக கோர்க்க தேவையான அளவு நூலும் எடுத்து கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த நூலில் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 21 ஏலக்காய்களை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து மாலை போல் கோர்த்து கொள்ளுங்கள். நீங்கள் கோர்த்த இந்த ஏலக்காய் மாலையை உங்கள் வீட்டில் மகாலட்சுமி விக்கிரகம் அல்லது மகாலட்சுமி புகைப்படம் இருந்தால் அதில் போடுங்கள்.
அப்படி உங்கள் வீட்டில் மகாலட்சுமி விக்கிரகம் அல்லது மகாலட்சுமி புகைப்படம் இல்லையென்றால் வேறு ஏதும் தேவியர் விக்கிரகம் அல்லது புகைப்படம் இருந்தாலோ அதற்கும் போடலாம்.
இந்த பரிகாரத்தை வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை நேரம் எனப்படும் காலை 6 மணியில் இருந்து 7 மணி அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணி அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை நேரங்களில் மட்டும் மேற்கொள்ளுங்கள்.
இப்படி இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கும்.
கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |