எப்படிப்பட்ட பணக்கஷ்டமும் நீங்க.. வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்திடுங்கள்..

Advertisement

கடன் தீர பணம் சேர பரிகாரம் | Kadan Thollai Theera Pariharam 

தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளுமே சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்களும் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் பண கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை மற்றும் சில கிழமைகளில்  செய்யக்கூடிய சில பரிகாரத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

Kadan Thollai Theera Pariharam 

பரிகாரம்: 1

வெள்ளிக்கிழமை அன்று உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று எடைக்கு எடை பச்சரிசியை தானமாக கொடுக்கலாம். இதனுடன் பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து குலதெய்வம் கோயிலில் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும். இப்படி எறும்புகளுக்கு உணவளிப்பதால் உங்களது கடன் பிரச்சனை தீர்ந்து, பணம் வருகை அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்

பரிகாரம்: 2

உங்கள் ஊரில் உள்ள எல்லை தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று பட்டு சார்த்தி பொங்கல் வைத்து படையல் போட்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

பரிகாரம்: 3

வெள்ளிக்கிழமை அன்று காலை ஆறு மணிக்குள் எழுந்து குளித்திவிட்டு உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் நெய் அல்லது நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்களை வழிபடுங்கள். அதேபோல் வெள்ளிக்கிழமை காலை உங்கள் வீட்டில் பூஜைகளை முடித்துவிட்டு சிறிதளவு சர்க்கரையை உங்கள் வீட்டு வாசலில் தூவி விடுங்கள் இப்படி  செய்வதினால் எறும்புகள், பூச்சிகள் அதனை சாப்பிடும் அதன் மூலம் உங்கள் கடன் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

பரிகாரம்: 4

வாரம் வாரம் சனீஸ்வரருக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட உங்கள் கடன் பிரச்சனைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.

பரிகாரம்: 5

செவ்வாக்கிழமை அன்று கொள்ளு தானம் செய்ய வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று பிள்ளையார் கோவிலில் எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் நீங்கிவிடும்.

பரிகாரம்: 6

அதேபோல் செவ்வாய்க்கிழமை அன்று பிள்ளையாருக்கு வெற்றிலை மாலை வாங்கி போடுவதன் மூலம் கடன் பிரச்சனை தீரும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..!

பரிகாரம்: 7

வளர்பிறை அன்று திருதியை திதி அன்று அன்னதானம் செய்வதன் மூலம் கடன் பிரச்சனை சரி ஆகும். ஒவ்வொரு மாதமும் இதனை நீங்கள் செய்யலாம்.

பரிகாரம்: 8

தொடந்து ஐந்து வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மல்லிகை பூவால் மாலை சார்த்தினால் கடன் பிரச்சனை ஒழியும்.

பரிகாரம்: 9

அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் நாட்களில் உங்கள் கடன் தொகையின் அசலை ஒரு பகுதியை அடைப்பதன் மூலம் கடன் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும்.

பரிகாரம்: 10

செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஹோரையில் கடனை அடைக்கலாம். அதேபோல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் தங்களது கடனை குளிகை நேரத்தில் திருப்பிக்கொடுத்தால் கடன் பிரச்சனை நீங்கும்.

இந்த 10 பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை செய்து வந்தாலே உங்கள் கடன் பிரச்சனை நீங்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement