கனவில் சுடுகாடு வந்தால் என்ன பலன்

kanavil sudukadu vanthal enna palan

கனவில் சுடுகாடு வந்தால் என்ன பலன்

கனவு என்பது அனைவருக்கும் வர கூடிய ஒன்று. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லி விட முடியாது. இருந்தாலும் குறிப்பிட்ட சில கனவுகளுக்கு அதாவது நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது வரும் குறிப்பிட்ட கனவுகளுக்கு என்ன பலன் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் நாம் காணும் கனவு நல்லதை உணர்த்துகிறதா, தீயவை உணர்த்துகிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் சுடுகாட்டை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

கனவில் சுடுகாடு வந்தால் என்ன பலன்:

கனவில் சுடுகாட்டை கனவில் பயப்பட வேண்டாம். நல்ல சகுனத்தையே குறிக்கும். சுடுகாட்டை கனவில் கண்டாலோ அல்லது சுடுகாட்டிக்கிற்கு செல்வது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வை காணலாம். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி சந்தோசம் ஏற்படுவதை குறிக்கிறது.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

சுடுகாட்டில் பிணம் எறிவது போல கனவு கண்டால்:

சுடுகாட்டில் பிம்பம் எறிவது போல கனவு கண்டால் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக கல்யாணம், கிரக பிரசேவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.

பிணத்தை தூக்கி செல்வது போல கனவு கண்டால்:

பிணத்தை தூக்கி செல்வது போல கனவு கண்டால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாத செயல்கள் முடிவுக்கு வரும். மேலும் பல நன்மைகளை அள்ளி தரும்.

திருநங்கை கனவில் வந்தால் என்ன பலன்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்