Kubera Silai Vaikum Thisai in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் வீட்டிலேயும் குபேரரின் சிலை அல்லது பொம்மைகளை வைத்துள்ளார்கள். அவ்வாறு வைப்பதில் எந்தவித தவறுமில்லை. ஆனால் அந்த சிலையை வைத்து வழிபாடும் முறைகளில் தான் சிலருக்கு சில சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும்.
அப்படி உங்களுக்கும் குபேர சிலையை வைத்து வழிபாடும் முறைகளில் சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
Where to Place Kuber Idol in House in Tamil:
இன்றைய காலக்கட்டத்தில் பல வடிவில் குபேரரின் சிலை உள்ளது. அப்படி பல வடிவில் உள்ள சிலைகளையும் வீட்டில் வைக்கலாம். ஆனால் அதில் குறிப்பாக தலைக்கு மேலே கைகளை தூக்கிகொண்டு சிரித்து கொண்டுள்ளவாறு உள்ள குபேரரின் சிலை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
அப்படி தலைக்கு மேலே கைகளை தூக்கிகொண்டு சிரித்து கொண்டுள்ளவாறு உள்ள குபேரரின் சிலையை உங்கள் வீட்டின் வாசலை நோக்கி பார்த்தவாறு வைப்பது மிகவும் நல்ல பலனை அளிக்கும்.
குறிப்பாக இந்த சிலையை நீங்கள் வீட்டைவிட்டு வெளியே சென்று திரும்பி வரும்பொழுது பார்ப்பதின் மூலம் நீங்கள் சென்று வரும் காரியம் நிச்சயம் வெற்றியை அடையும்.
மேலும் உங்களுக்கு வரவேண்டிய கடன் நிலுவைத் தொகைகளும் விரைவில் உங்களை வந்து சேரும். இப்படி சிரித்துக்கொண்டுள்ள குபேரரின் சிலையை பார்த்து வீட்டினுள் வரும் பொழுது உங்களின் மனதில் உள்ள அனைத்து குழப்பங்களும் நீங்கி மனநிம்மதி அடைவீர்கள்.
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை
குபேரன் சிலை வைக்கும் முறை:
பொதுவாக வீட்டில் ஒரே ஒரு குபேரரின் சிலை வைத்து வழிபடுவது மட்டுமில்லாமல் இரண்டு குபேரரின் சிலையை ஜோடியாக வைத்து வழிபடுவது மிகவும் நல்ல பலனை அளிக்கும்.
அடுத்து உங்கள் வீட்டில் உள்ள குபேரரின் சிலையின் இரண்டு கைகளிலும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயங்களை வைப்பது மிகவும் நல்லது.
அதிலும் குறிப்பாக அந்த நாணயங்கள் கீழே விழாமல் இருப்பது முக்கியம் அதனால் அந்த நாணயத்தை செல்லோ டேப் வைத்து ஒட்டிக்கொள்ளுங்கள் அதில் எந்த தவறுமில்லை.
குபேரன் புகைப்படம் வைக்கும் முறை:
குபேரரின் சிலை மட்டுமில்லை குபேரரின் உருவப்படத்தையும் வைத்து வழிபடுவதில் சில வழிமுறைகள் உள்ளது. அதில் முதலாவதாக குபேரரின் உருவப்படத்தை கிழக்கு திசையை நோக்கியுள்ளவாறு மாட்டிவைப்பது மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் பணத்தை வைத்திருக்கும் இடத்தில் குட்டி குபேரரின் சிலை அல்லது குபேரரின் உருவப்படத்தை வைப்பது உங்கள் வீட்டின் செல்வளத்தை அதிகரிக்க உதவி புரியும்.
மேலேகூறியுள்ள வழிமுறைகளில் உங்கள் வீட்டில் குபேரரின் சிலையை வைத்தால் உங்கள் வீடுதேடி பணம் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |