• Contact us
  • Terms of Services
  • Privacy Policy
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
No Result
View All Result
No Result
View All Result
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
No Result
View All Result

வீட்டில் லட்சுமி கடாட்சம் வர என்ன செய்ய வேண்டும்? | Lakshmi kataksham tips in tamil

Sathya Priya by Sathya Priya
November 9, 2023 8:02 am
in ஆன்மிகம்
0
lakshmi kataksham tips in tamil

லட்சுமி கடாட்சம் பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! | Lakshmi kataksham tips in tamil

Lakshmi kataksham tips in tamil:- நம் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பெருக வேண்டும் என்றால்? அதற்கு நாம் என்னென்ன வழிமுறைகளை பின் பற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். வீட்டில் மஹாலட்சுமி கடாட்சம் வர நாம் சில வகையான வழிமுறைகளை பின் பற்றினாலே போதும், அந்த மகாலட்சுமியின் அருளை நாம் பெற இயலும்.

வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சம் இருந்தால் செல்வம் வளம் மற்றுமின்றி பதினாறு பேறுகளையும் பெறலாம். இவ்வுலகில் ஸ்ரீ லட்சுமியின் அருள் கடாட்சியத்தை விரும்பாதவர்கள் எவரும் இருக்க இயலாது ஸ்ரீ மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் இந்த உலகத்தில் அனைத்து சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும்.

காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?

 

சரி வாங்க வீட்டில் ஸ்ரீ மஹாலட்சுமி கடாட்சம் வர என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்வது?

Lakshmi

Lakshmi kataksham tips in tamil: 1

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சயம் பெருக நம் வீடு எப்பொழும் மங்களகரமாக வைத்திருக்க வேண்டும். அதாவது வீட்டின் வாசலில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

அதேபோல் வீட்டின் வாசல் பகுதிகளில் வாசனை நிறைந்த மலர்களை வைக்கலாம் அல்லது மலர்ச்செடிகளை வளர்க்கலாம்.

Lakshmi kataksham tips in tamil: 2

எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் சரி, அந்த வீட்டின் நுழைவுவாசலில் ஒரு நிலைக்கண்ணாடி அல்லது கற்பகவிநாயகரின் புகைப்படத்தினை வைக்க வேண்டும்.

பலர் ஸ்ரீ மகாலட்சுமியின் திரு உருவ படத்தினை வீட்டு வாசலின் வெளிப்பகுதியை பார்ப்பது போல் வைத்திருப்பார்கள், இவ்வாறு வைப்பது மிகவும் தவறான முறையாகும்.

மஹாலட்சுமியின் திரு உருவ படத்தினை எப்பொழுதும் வீட்டின் உள்பகுதியை பார்ப்பது போல்தான் வைக்க வேண்டும்.

எனவே இனியாவது நுழைவுவாசலின் வெளிப்பகுதியில் கற்பகவிநாயகரின் படத்தையும், மஹாலட்சுமியின் திரு உருவ படத்திதை நுழைவுவாசலின் உள்பகுதியை பார்ப்பது போல் வையுங்கள், இவ்வாறு வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

Lakshmi kataksham tips in tamil: 3lakshmi kataksham tips in tamil 1

வீட்டில் மஹாலட்சுமியின் அருள் பெருக எப்பொழுதும் வீட்டை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டினுள் பூஜை அறை மற்றும் சமையல் அறை இவை இரண்டும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக பூஜை அறையில் ஏதாவது நறுமணம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்தி அல்லது சாம்பூராணி போட்டு இறைவனை வழிபட வேண்டும்.

லட்சுமி நரசிம்மர் கோவில் சிறப்புகள்..!

Lakshmi kataksham tips in tamil: 4

வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை சிரித்த முகத்துடன் அன்புடன் வரவேற்க வேண்டும். அதேபோல் கன்னி பெண்களுக்கு மற்றும் சுமங்கலி பெண்கள் நம் வீட்டிற்கு வந்தார்கள் என்றால், அவர்கள் திரும்ப போகும் போது அவர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து அனுப்பவேண்டும்.

Lakshmi kataksham tips in tamil: 5

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை அன்புடன் உபசரிக்க வேண்டும். ஏனென்றால் விருந்தாளிகள் வரும் பொழுது அவர்களுடன் மகாலட்சுமியும் வருவார்களாம், எனவே விருந்தாளிகளை அன்புடன் உபசரித்தாள், விருந்தாளிகள் போகும் போது மகாலட்சுமி நம் வீட்டுலேயே தங்கிவிடுவார்களாம்.

விருந்தாளிகளை சரியாக உபசரிக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டை விட்டு செல்லும் போது மிகவும் மனம் வருத்தத்துடன் செல்வார்கள், அந்த சமயத்தில் மகாலட்சுமியும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்களாம்.

Lakshmi kataksham tips in tamil: 6

வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு நாணயத்தால் பூஜை செய்து அந்த நாணயத்தை நாம் வைத்திருப்பதன் மூலம் நம் வீட்டில் மஹாலட்சுமி குடி இருப்பாள்.

Lakshmi kataksham tips in tamil: 7

குபேரனுக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் ஊறுகாய், எனவே வீட்டின் சமையலறையில் உப்பு, ஊறுகாய் மற்றும் மஞ்சள் நிறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் மஹாலட்சுமி குடி இருப்பாள்.

Lakshmi kataksham tips in tamil: 8

குறிப்பாக வெள்ளி கிழமை அல்லது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மகாலட்சுமியை மனதில் நினைத்து, நாணயங்களினால் அர்ஜனை செய்து அந்த நாணயங்களை நாம் வைத்திருந்தனாலே நம் வீட்டில் மஹாலட்சுமி குடியிருப்பாள்.

இவையெல்லாம் நம் வீட்டில் மஹாலட்சுமியின் கடாட்சம் பெருக்குவதற்கான வழிமுறைகளாகும்.

சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா???

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Tags: lakshmi kadaksham tipsLakshmi kataksham tips in tamilveetil lakshmi kadatcham peruga in tamilveetil lakshmi kadatcham peruvathu eppadiமகாலட்சுமி வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்லட்சுமி கடாட்சம் பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்வது
Previous Post

பிரிட்ஜ் இல்லாமலே முட்டை 15 நாட்கள் வரைக்கும் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமா.?

Next Post

தீபாவளிக்கு இதவிட ஈசியா யாராலும் லட்டு செய்ய முடியாதுங்க! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..!

Next Post
தீபாவளிக்கு இதவிட ஈசியா யாராலும் லட்டு செய்ய முடியாதுங்க! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..!

தீபாவளிக்கு இதவிட ஈசியா யாராலும் லட்டு செய்ய முடியாதுங்க! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.