முருகனுக்கு நீங்கள் விரதம் இருப்பீர்களா.! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

murugan viratham in tamil

முருகன் விரதங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் முருகனுக்கு விரதம் இருக்கும் முறைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக முருக பெருமானுக்கு முக்கியமான விரதங்கள் என்று மூன்று விரதங்கள் உள்ளன. அதாவது வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் என்று மூன்று விரதகங்கள் உள்ளன. இதில் வார விரதம் என்பது செவ்வாய் கிழமையில் மட்டும் இருப்பதாகும். நட்சத்திர விரதம் என்பது கார்த்திகையில் விரதம் இருப்பதாகும், திதி விரதம் என்பது சஷ்டியில் மட்டும் இருக்க கூடிய விரதமாகும். மேலும் முருகனுக்கு விரதங்கள் எப்படி இருப்பது, அவருக்கு உகந்தவை எதுவென்றும்  தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?

 

முருகனுக்கு விரதம் இருக்கும் முறை:

மாதத்தொறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலை எழுந்ததும், நீராடி விட்டு, முருக பெருமானை நினைத்துக்கொண்டு, நாம் எதற்காக விரதம் இருக்கின்றோமோ அதை மனதில் நினைத்து கொண்டு விரதத்தை தொடங்குவது நல்லது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதம் இருப்பதால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்றும் சொல்லப்படுகிறதது.

ஐப்பசி பிறந்து விட்டால் முருகனுக்கு மிகவும் உகந்த நாள், அன்று சஷ்டி திதியில்  முருகனுக்கு விழா நடத்தப்படும், சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். அந்த நாட்களில் விரதம் இருந்து, கோவிலுக்கு செல்வது மிகவும் நல்லது.

சிலர் சஷ்டி விரதங்கள் அன்று கோவிலில் தங்கி இருப்பார்கள், அப்போது கோவிலுக்கு அருகில் இருக்கும் குளம், கடல், ஆறுகளில் நீராடி வருவது பல நன்மைகள் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

முருகன் வணங்கும் முறை:

பொதுவாகவே முருகனுக்கு கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம் போன்ற விரதங்கள் எடுக்கும் பொழுது. கோவிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டிற்கு வந்ததும் பால் அல்லது பழச்சாறுகள் மற்றும் அருந்தி.  வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு விளக்கு ஏற்றிவைத்து, பூக்களால் அலங்காரம் செய்து, கந்த சஷ்டிக் கவசத்தை படித்து வருவது நல்லது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இதேபோல் ஒன்பது செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

முருகன் வழிபாடு நன்மை:

முருகனுக்கு விரதம் இருப்பதால் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது, திருமணமாகி நீண்ட நாள் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், அதுமட்டுமின்றி ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்கு முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்லது.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்