திடீர் பணவரவிற்கு இந்த மூன்று பொருட்களை இப்படி வையுங்கள் போதும்..!

Advertisement

Pana Varavu Athikarikka Pariharam in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது சேர்ந்தாலும் சீக்கிரத்தில் செலவாகி விடுகின்றது என்று கவலைப்படுபவரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் எளிமையான முறையில் பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை செய்து உங்கள் வீட்டின் பணவரவையும் அதிகப்படுத்தி பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீடு தேடி பணம் வருவதை யாராலும் தடுக்க முடியாது

Pana Varavu Athikarikka Tips in Tamil:

Pana Varavu Athikarikka Tips in Tamil

பணம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஆனால் ஒரு சிலர் என்னிடம் பணவரவு குறைவாகவே உள்ளது என்று கவலைப்படுவார்கள்.

அவர்களுக்காக உதவும் வகையில் தான் எளிமையான முறையில் பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். முதலில் ஒரு சிறிய துண்டு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள்.

அதில் 2 சிறிய துண்டு பச்சைக் கற்பூரத்தை வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 2 ஏலக்காய் மற்றும் 27 பெருஞ்சீரகம் ஆகியவற்றை வைத்து நன்கு முடிந்து கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

மூன்றாம் பிறை அன்று இதை மட்டும் பீரோவில் வையுங்கள் பணம் வரவு அதிகமாகும் 

இந்த முடிச்சிருக்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து அதனை உங்களின் பூஜை அறையில் வைத்து அதற்கு பூஜை செய்யுங்கள். பின்னர் இதனை உங்கள் வீட்டில் அதிக பணப்புழக்கம் உள்ள இடத்தில் வையுங்கள்.

அதாவது பீரோல், மணிபர்ஸ் மற்றும் கல்லாப்பெட்டி போன்ற பணப்புழக்கம் உள்ள இடங்களில் வையுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை மாற்றி கொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கொள்வது நல்ல பலனை அளிக்கும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டின் பணவரவு விரைவில் அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

வீட்டில் குபேர சிலையை இந்த மாதிரி வைத்து பாருங்கள் உங்கள் வீடுதேடி பணம் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement