பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

Advertisement

 

பூராடம் நட்சத்திரத்தின் குணங்கள் 

வணக்கம் நண்பர்களே  இன்றைய பொதுநலம் பதிவில் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்  கொள்ளலாம். பூராடம் நட்சத்திரத்தை பூர்வாசதா என்றும் அழைப்பார்கள். பூராடம் ஒரு முழு நட்சத்திரம் ஆகும். இது பெண் குணத்தை சார்ந்த மனித குணத்தை சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் என்பதினால் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் அனுபவிக்க போவது சுக்கிர திசை தான். பூராடம் நட்சத்திரத்தின் பாத அதிபதி சூரியன். மேலும் இவர்களின் பொதுவான குணங்களை நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் 

பூராடம் நட்சத்திரத்தின் குணங்களும் – உடல் அமைப்பும்:

  • பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட உடல் அமைப்பும் குறுகிய நெற்றியை உள்ளவர்கள்.
  • சூதுவாது இல்லாமல் பேசுவார்கள்.
  • சுவையான உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.
  • தாய் பாசம் அதிகம் உள்ளவர்கள்.
  • பயணம்  செல்வதில் அதிகம் விருப்பம் உள்ளவர்கள்.
  • இவர்கள் தூய்மையை அதிகம் எதிர் பார்ப்பவர்கள்.
  • மற்றவர்களிடம் பேசும் பொழுது நியாயமாக இருப்பவர்கள்.
  • எந்த பிரச்சனையாக இருந்தாலும் இவர்கள் பேசுவதில் சமாதானத்தில் முடியும்.
  • அனைத்து காரியங்களையும் திட்டமிட்டு செய்பவர்கள்.
  • ஒரு குறிக்கோள்களை மனத்தில் வைத்து கொண்டு வாழ்க்கையை குறிக்கோளுடன் நகர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • எளிமையாக மற்றவர்களிடம் இருந்து வேலை வாங்குவதில் சாமர்த்தியம் உள்ளவர் என்று சொல்லப்படுகிறது.
  • இவரை நம்பி வருபர்களை கைவிட மாட்டார்.
  • தர்ம சிந்தனைகளை உடையவர்.
  • சுகங்களை அனுபவிப்பது மட்டுமே அதிகம் விருப்பம் உடையவர்கள்.
  • பிடிவாத குணங்கள் மிகவும் கடினமாக இருக்கும்.
  • கல்வியின் மீது நாட்டம் உள்ளவர்கள்.
  • பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுபவர்.

நட்பும் பகையும் கொண்ட ராசிகள்:

நட்பு ராசிகள் – மேஷம், சிம்மம்,  தனுசு,  கும்பம்,  துலாம்.

பகை ராசிகள் – ரிஷபம் ராசி, கன்னி ராசி, கடகம் ராசி, மீனம்.

தொழில் அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு:

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய தொழில் செய்வதில் லாபம் கிட்டும். துணி கடை, விளையாட்டு பொருட்கள் தயாரிப்பது போன்ற தொழில்களில் அதிகம் லாபம் கிடைக்கும். ஏதாவது ஒரு தொழிலை நிரந்தரமாக செய்வது நல்லது. கூட்டாளியாகவும் சேர்ந்து தொழில் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். மருத்துவம், வழக்கறிஞர், பொது மக்களிடம் பேச்சி போன்றவற்றில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அரசு வேலைகள் கிடைக்கவும் அதிகம் வாய்ப்பு உள்ளது. தெற்கு, வடக்கு  வாசப்படி வைத்த வீடுகளில் வசிப்பது நல்லது.

அதிஷ்ட கிழமைகள்  மற்றும் அதிஷ்ட எண்கள், நிறங்கள் , பெயர் எழுத்துக்கள்:

அதிஷ்ட கிழமைகள்: 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிஷ்ட கிழமை புதன்கிழமை,  ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை இவர்களுக்கு  அசுபம் ஆகும்.

அதிஷ்ட எண்கள்:  

3 மற்றும் அதனுடைய கூட்டு எண்கள். 12 மற்றும் 21  சுபம் தரும். 5 மற்றும் 6 அசுபம் ஆகும்.

அதிஷ்ட நிறம்:

இவர்களின் அதிஷ்ட நிறம் கருப்பு, பச்சை, வெள்ளை, நீலம் போன்றவை இவர்களின் அதிஷ்ட நிறம் ஆகும். கருப்பு நிறத்தை அதிகம் வைத்து கொள்ளுவது நல்லது.

பெயர் எழுத்துக்கள்:

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பு, ப, த,ட போன்ற எழுத்துக்களில் பெயர் வைப்பது நல்லது.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை: 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 90% காதல் திருமணத்தில் தான் முடியும். இவர்கள் காதலிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்களின் லட்சியம் கண்டிப்பாக உயர்ந்ததாகவே இருக்கும். காதலில் அதிக எதிர்ப்புகள் வந்தாலும் அதை அடைவதில் அதிகம் கஷ்டங்களும் படுவார்கள். காதலிப்பதில் அதிக நேரம் செலவழிப்பார்கள். அவர்களின் மீது அதிக அன்பும் செலுத்துவார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement