தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

Advertisement

Rahu Ketu Peyarchi October 2023

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் ராகு கேது பெயர்ச்சியினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது 2023-ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி ஆனது அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி ஆனது நடக்கவிருக்கிறது. அப்படி பார்த்தால் ராகு கேது பெயர்ச்சி சுமார் 18 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களது ராசியை மாற்றுகிறது. இவ்வாறு மாற்றம் அடையும் போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பலன்களை அளிக்காமல், வெவ்வேறு முறையில் அளிக்கிறது. அதாவது நன்மை செய்யும் கிரங்களுக்கும் நன்மையினையும், கெடுதல் உண்டாகும் கிரங்களுக்கு கெடுதலையும் அளிக்கும் விதமாக தான் இருக்கிறது. அதாவது நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்தின் கிரங்களுக்கு ஏற்றவாறே பலன்கள் அனைத்தும் அமைகிறது. அந்த வகையில் இந்த வருட ராகு கேது பெயர்ச்சில் மேஷ ராசியிலிருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியிலிருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். ஆகவே இத்தகைய பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!

சனி உச்சத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிஷ்ட மழை தான் 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024:

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை ராகு கேது பெயர்ச்சி ஆனது இனி வரும் காலங்கள் அனைத்தும் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அளிக்கும் விதமாக தான் காணப்படுகிறது.

மேலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு என பாராட்டும், புகழும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு கேது பெயர்ச்சி மட்டும் இல்லாமல் குரு சண்டாள யோகமும் உருவாகுவதால் வாழ்க்கையில் அமோகமான பலன்களும், வெற்றியும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புகளே இருக்கிறது.

ஆகவே இத்தகைய காலத்தில் உங்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் அதிர்ஷ்டமானது அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் இல்லாத வளர்ச்சி ஆனது காணப்படும். மேலும் பொருளாதார நிலை மேம்படும்.

மீன ராசி:

மீன ராசி

மீன ராசிக்காரர்கள் எப்போது மீன் போல வளைந்து நழுவி விடுவார்கள் என்று கூறுவார்கள். இத்தகைய அமைப்பினை கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும் விதமாக காணப்படுகிறது.

இதுநாள் வரையிலும் காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் நல்ல நிலை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை உங்களுக்கான அங்கீகாரமும் சரி, பொருளாதார நிலையும் சரி சிறப்பானதாக இருக்கும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசிசிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியினால் உருவாகும் பலன் சாதகமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.

மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட வீண் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் உண்டாகும். அதேபோல் நிதிநிலை ரீதியாக அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இது காணப்படும். மேலும் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும் விதமாக காணப்படும்.

அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.

ராகு கேது பெயர்ச்சியால் இனி இந்த ராசிக்கார்களின் வாழ்க்கை பொற்காலமாக மாறப்போகிறது 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement