இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Simmam Rasi Palan 2023 in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே எதிர்க்காலத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்தவகையில் இன்றைய ஆன்மிக பதிவில் வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டு சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எவ்வாறு அமையவிருக்கிறது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டு சிம்ம ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்த இருக்கின்றது. அவ்வாறு ஏற்படும் மாற்றங்களும் திருப்பங்களும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்குமா.! தீமையை அளிக்குமா.! என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

2023-ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு இப்படி தான் இருக்கும்

Simma Rasi Palan 2023 in Tamil:

Simmam Rasi Palan 2023 in Tamil

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த 2023-ஆம் ஆண்டு நன்மையையும் தீமையும் கலந்த பலனை அளிக்கக்கூடிய ஆண்டாகவே அமையும். அதனால் உங்களின் அனைத்து செயல்களிலும் அதிக கவனம் தேவை.

உங்களின் தொழிலில் வெற்றி பெறுவதற்கு சற்று காலதாமதம் ஆகலாம். ஆனாலும் உங்களின் விடாமுயற்சியின் காரணமாக நீங்கள் வெற்றி அடைவீர்கள். மேலும் நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுதும் பணவிஷயத்திலும் அதிக கவனமுடன் இருப்பது நன்மையை அளிக்கும்.

சிம்ம ராசி தொழில் எப்படி இருக்கும்: 

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல உயரங்களை ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 17-க்குப் பிறகு சனிபகவான் உங்களின் ஏழாவது வீட்டிற்கு வரும்போது உங்களுடைய தொழில் சிறப்பான முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆனால் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழவிருக்கும் குருபெயர்ச்சியின் பொழுது உங்களுக்கு வேலை மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அதுவும் உங்களுக்கு நல்ல நிலையை வழங்கும் மற்றும் உங்கள் தொழில் மிக உயரத்திற்கு செல்லும்.

2023-ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

சிம்ம ராசி பொருளாதார நிலை எப்படி இருக்கும்:

2023 new year rasi palan simmam in tamil

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும் சூரிய பகவான் அருளால் நல்ல செல்வத்தைப் பெறுவீர்கள். ஏழாவது வீட்டில் சனி பெயர்ச்சியால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

குறிப்பாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உள்ள காலம் மிகவும் சிறப்பான நேரமாக இருக்கும். ஆனால் அக்டோபரில் ராகு எட்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது அந்த நேரம் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ஏனெனில் அந்த நேரத்தில் பண நஷ்டம் வரலாம். எனவே இந்த காலக்கட்டத்தில் பணவிஷயத்தில் அதிக கவனம் தேவை.

சிம்ம ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்:

சிம்ம ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் காதல் விவகாரங்களில் வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் புதனுடன் ஐந்தாவது வீட்டில் இருக்கிறார்.

இது உங்களின் காதலை அடுத்த நிலைக்கு அதாவது திருமண வாழ்க்கைக்கு அழைத்து செல்லும். ஆனால் சனி ஆறாவது வீட்டைக் கடந்து ஏழாவது வீட்டில் நுழைவதால் முதல் காலாண்டு சற்று பலவீனமாக இருக்கும்.

சனி பகவானின் தாக்கம் ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் வாழ்க்கை துணையை தொந்தரவு செய்யலாம்.

அதன் பிறகு சனி பகவான் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டிற்கு வரும் போது ​​அந்த நேரம் திருமண வாழ்க்கைக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியமும் வலுவாக இருக்கும்.

குறிப்பாக நவம்பர் – டிசம்பர் மாதங்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாத சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்திக்கிட்டும்.

 2023-ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு இப்படி தான் இருக்கும்

சிம்ம ராசி குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்:

2023 rasi palan in tamil

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் கலவையான பலன்களைத் தரப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நான்காவது வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்கள் செயலில் சில கடுமைகள் இருக்கும்.

இதனால் குடும்பத்தில் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும் ஆனால் குடும்பத்தில் செல்வச் செழிப்பும் கூடும். குறிப்பாக மார்ச் மாதத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் குரு பகவானின் பார்வை ஏப்ரல் மாதம் வரை உங்களின் இரண்டாம் வீட்டில் இருக்கும். அதனால் நீங்கள் இனிமையாகவும் பேசுவீர்கள் மற்றும் குடும்பத்தில் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

சிம்ம ராசிகாரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்:

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் கலவையான பலன்களைத் கிடைக்கப்போகிறது. குறிப்பாக ஆண்டின் ஆரம்பம் உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்கான சில குறிப்பை அளிக்கும்.

இந்த ஆண்டில் நீங்கள் வயிற்று பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம். அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனமுடன் இருப்பது நன்மையை அளிக்கும்.

 2023- ஆம் ஆண்டு தனுசு ராசிக்கு இப்படி தான் இருக்கும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement