வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களுடைய வீட்டில் தங்கம் குறையாமல் சேருவதற்கு சனிக்கிழமை இதை செய்யுங்கள்

Updated On: December 10, 2022 4:37 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

தங்கம் வீட்டில் தங்குவதற்கு

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மிகம் பதிவில் தங்கம் வீட்டில் சேருவதற்கு ஒரு பரிகாரத்தை செய்யப்போகிறேன். பொதுவாக சிலர் வீட்டில் அதிகம் கஷ்டத்தை மட்டும் அளிக்கிறார் கடவுள் என்று அவரை திட்டுவது உண்டு. ஆனால் அவரவர் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது தான் நடக்கும். சிலர் வீட்டில் நன்றாக சம்பாதிக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டில் பணமும் சேருவதில்லை நகைகளும் சேருவதில்லை காரணம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லை அதனால் வீட்டில் எந்த பொருளை எங்கு வைத்தால் என்ன நல்லது நடக்கும் என்று நம் முந்தைய பதிவில் பதிவிட்டியுள்ளோம்..! இப்போது தங்கம் சேருவதற்கு பரிகாரம் பார்க்கப்போகிறோம் வாங்க அதனை பார்த்து வீட்டில் செய்யலாம்.

thangam sera pariharam tamil:

வீட்டில் ஒரு சின்ன ஊசி அளவிற்கு கூட தங்கள் இல்லையா..? பிள்ளைகளுக்கு தங்கம் அணிந்து பார்க்க ஆசை உள்ளதா அப்படி என்றால் இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

வாரம் வாரம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கோ அல்லது உங்களுக்கு பிடித்த பெருமாள் கோவிலுக்கோ சென்று திருமணம் ஆன பெண்கள் மகாலட்சுமியாக தாலியை சுமந்துகொண்டு பெருமாளை சனிக்கிழமை தோறும் வழிபடுவது நல்லது அதேபோல் அவர் தொழிலுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.

துளசி மாலை

அதுபோல் கோவிலுக்கு செல்பவர்கள் பெருமாளுக்கு உகந்த துளசியை மாலையாக கட்டி அவர்க்கு சாற்றினால் தொழிலில் விருத்தி கிடைக்கும்.

தங்கம் வீட்டில் தங்குவதற்கு

அனைத்து பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு பெருமாளுக்கு சாற்றிய துளசியை பிரசாதமாக தருவது வழக்கம். அதனை வாங்கி கண்களில் ஒத்துக்கொண்டு சாப்பிடுவீர்கள்.  இனி அனைத்தையும் சாப்பிடாமல் சிறிதளவு வீட்டிற்கு எடுத்துவந்து தங்கம் வைக்கும் இடத்தில் துளசியோடு இரண்டு கிராம்பு மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து போதும் தங்கம் சேர ஆரம்பிக்கும். 

அதுபோல் தொழில் விருந்தி, பதவி உயர்வு, பணம் அதிகமாகும், கடன் ஒழியும் புதிய நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். வருமானம் பெருக ஆரம்பிப்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் சிறிய அளவில் தங்கம் வைத்தாலும் அத்தனை வடக்கு திசையில் இருப்பது நல்லது. எனவே தங்கம் இருக்கும் இடத்தில் பட்டு துணி இருக்க வேண்டும். பெட்டியில் தங்கம் இல்லையென்றாலும் ஒரு பட்டு துணியில் தங்கம் வைப்பது நல்லது அதனால் வாரம் தோறும் சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு தரும் துளசியை பட்டு துணியில் இருக்கும் தங்கத்தில் இந்த பொருட்களை வையுங்கள்  தங்கம் பெரும். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

சனிக்கிழமையில் குழந்தை பிறந்தால் ⇒ பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now