தூங்கி எழுந்ததும் காலையில் இதை மட்டும் பார்க்க கூடாது ஏன் தெரியுமா..?

Advertisement

தினமும் எழுந்தவுடன் பார்க்க கூடாதவை

நமது வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை நமக்கு கற்று தருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாளும் இரவு தூங்க செல்வதற்கு முன்பும் சரி அல்லது தூங்கி எழுந்த பின்பும் சரி இன்றைய நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இத்தகைய சூழ்நிலையில் நாம் காலையில் எழுந்த உடன் சிலவற்றை பார்க்காமல் இருப்பதனால் துருதிஷ்டமான செயல்கள் எதுவும் நடக்காமல் இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்ககூடாதவை என்னென்ன என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பணக்கஷ்டங்கள் எதுவும் தவிர்க்கலாம் வாருங்கள்.

Things Not to Do After Waking Up in Tamil:

தீ காட்சி:

தீ காட்சி

காலையில் எழுந்ததும் தீ சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் படங்களை பார்க்க கூடாது. ஏனென்றால் காலையில் எழுந்ததும் இதுபோன்ற படங்களை பார்ப்பதன் மூலம் அந்த நாள் முழுவதும் தீராத கஷ்டம் மற்றும் ஏதாவது நோய் ஏற்படும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மொபைல்:

மொபைல்

அதுபோல காலையில் எழுந்ததும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் காலையில் எழுந்ததும் மொபைல் போனை பார்ப்பதன் மூலம் அதில் ஏதாவது அதிர்ச்சியான செய்திகள் வந்து இருந்தால் அதனை நீங்கள் பார்க்கும் போது அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு நல்ல நாளாக அமையாது என்று சாஸ்திரம் படி கூறப்படுகிறது.

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

சண்டை போடுவது:

சண்டை போடுவது

நீங்கள் காலையில் எழுந்ததும் சண்டை மாதிரியான காட்சிகள் மற்றும் சண்டை மாதிரியான விவாதங்களை யாரிடமும் வைத்து கொள்ள கூடாது. ஏனென்றல் இதுபோன்ற செயல்களில் நாம் ஈடுபடுவதன் மூலம் அந்நாள் முழுவதும் சண்டையுடனும் மற்றும் பண கஷ்டமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் மேலே சொல்லப்பட்டுள்ள செயல்களை செய்வது மற்றும் பார்க்காமல் இருப்பதன் மூலம் அன்றைய நாள் நல்ல நாளாகவும் மற்றும் பண கஷ்டம் வராமலும் இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் இதை பாருங்கள் அதிர்ஷ்டம் வரும்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement