ஜனவரி 1 -ஆம் தேதி மறந்தும் உங்கள் வீட்டுக்காக இந்த பொருட்களை மட்டும் வாங்கிவிடாதீர்கள்..!

Advertisement

Things not to do on New Year’s Day in Tamil 

இன்றைய பதிவில் வருகின்ற புத்தாண்டு தினத்தன்று மறந்தும்கூட உங்களின் வீட்டுக்காக வாங்க கூடாத பொருட்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி இந்த பதிவில் கூறியுள்ள பொருட்களை வாங்கினீர்கள் என்றால் உங்களுக்கு இந்த ஆண்டில் பெரிய அளவில் பணவிரயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்த பதிவில் கூறியுள்ள ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் கூட உங்களுக்கு இந்த ஆண்டில் பெரிய அளவில் பண நஷ்டத்தை ஏற்படும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன பொருட்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

What is it Unlucky to do on New Year’s Day in Tamil: 

1. எண்ணெய்:

3 things not to do on new year's day in tamil

புத்தாண்டின் முதல் நாள் அன்று உங்களின் வீட்டு பயன்பாட்டிற்காக எண்ணெயை வாங்காதீர்கள். அது எந்த எண்ணெயாக இருந்தாலும் சரி அப்படி உங்கள் வீட்டில் எண்ணெய் தீர்ந்து போகப்போகின்றது என்றால் ஒன்று புத்தாண்டின் முதல் நாளிற்கு முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி இல்லையென்றால் புத்தாண்டிற்கு அடுத்த நாளில் வாங்கிக்கொள்ளுங்கள். பொதுவாக சிலர் விசேஷ நாட்களில் கோவில்களுக்கு விளக்கேற்றும் எண்ணெய் வாங்கி தருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அவர்கள் வேண்டுமென்றால் எண்ணெயை வாங்கி கோவில்களுக்கு அளிக்கலாம். ஆனால் உங்களின் வீட்டு பயன்பாட்டிற்காக எண்ணெயை வாங்கவே கூடாது.

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் இந்த ஆண்டு எப்படி இருக்கும்

2. ஆயுதங்கள்: 

What is it unlucky to do on new year's day in tamil

புத்தாண்டின் முதல் நாள் அன்று உங்களின் வீட்டு பயன்பாட்டிற்காக எந்தவித கூர்மையாக உள்ள ஆயுதங்களையும் வாங்கிவிடாதீர்கள். குறிப்பாக கத்தி, கடப்பாரை, அரிவாள் மனை, மண்வெட்டி மற்றும் நகவெட்டி போன்ற வெட்டுவதற்கு பயன்படும் ஆயுதங்களையும் வாங்கிவிடாதீர்கள்.

இவை போன்ற ஆயுதங்களை புத்தாண்டின் முதல் நாள் அன்று வாங்குவதினால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இது போன்ற ஆயுதங்களை வாங்கிவிடாதீர்கள்.

3. மருந்து:

Puthandu day seiya kudatha seyalgal in tamil

புத்தாண்டின் முதல் நாள் அன்று மருந்தையும் வாங்கிவிடாதீர்கள். திடீரென ஒருவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றால் அவர்கள் மருந்து வாங்கி சாப்பிடலாம்.

ஆனால் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் உங்களின் மருந்து தீர்ந்து போகப்போகின்றது என்றால் ஒன்று புத்தாண்டின் முதல் நாளிற்கு முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி இல்லையென்றால் புத்தாண்டிற்கு அடுத்த நாளில் வாங்கிக்கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு

4. கடன்: 

New year day seiya kudatha seyalgal in tamil

அடுத்து புத்தாண்டின் முதல் நாள் அன்று கடன் கொடுக்கவோ வாங்கவோகூடாது. இந்த கடன் வாங்கக்கூடாது என்பதில் உங்களின் நகைகளை அடமானமாக வைத்து வாங்குகின்ற கடனும் அடங்கும்.

இப்பொழுது ஒருவருக்கு திடீரென மிகவும் இக்கெட்டான சூழல் வந்துவிட்டது என்றால் அவர்கள் வேண்டுமென்றால் கடன் வாங்கலும்.

மேலே கூறியுள்ள அனைத்து குறிப்புகளும் அனைத்து விசேஷ தினங்களுக்கும் பொருந்தும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement