திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..! Thirumana Rasi Porutham Tamil..!

Advertisement

திருமணத்தில் இணைய கூடாத ராசிகள் ஜோதிடம் கூறும் உண்மை..! Kalyana Rasi Porutham In Tamil..!

Thirumana Rasi Porutham In Tamil: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் திருமணத்தில் இணைய கூடாத ராசிகள். இணைய கூடாத ராசியுடன் சேர்ந்தால் என்ன நிகழும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். திருமணத்தில் 10 பொருத்தம் சரியாக அமைந்தால் தான் தம்பதியினரின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது வழக்கம். திருமணத்தில் பொதுவாக நட்சத்திர பொருத்தம், கிரக பொருத்தம் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. சரி வாங்க நண்பர்களே இப்போது எந்த ராசிகள் இணைந்து திருமணம் செய்யக்கூடாது என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இணையக்கூடாத ராசிகள்:

சிம்மம் – கன்னி ராசி:

காலசக்கரத்தின் ஐந்தாம் வீடான சிம்ம ராசியும், காலசக்கரங்களின் ஆறாம் வீடு என்று கூறும் கன்னி ராசியும் திருமண வாழ்க்கையில் இணைய கூடாது. சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையானது ஆரம்ப காலத்தில் நன்றாக இருக்கும்.

சிறிது நாளடைவு காலங்களில் சிம்ம ராசியின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கிவிடும். இதனால் தம்பதியினருக்கு உறவில் பல இன்னல்கள் ஏற்படக்கூடும். மேலும் கன்னி ராசியில் இருந்து சிம்மம் 12 ஆம் வீடாக வருவதால் திருமண தம்பதியினர் திருமணம் ஆகியும் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும்.

மீனம் – சிம்மம் ராசி:

காலசக்கரத்தின் 12-ம் வீடான மீன ராசியும்  காலசக்கரங்களின் ஐந்தாம் வீடு சிம்ம ராசியும் இணைய கூடாத ராசிகள் ஆகும். சிம்ம ராசியில் இருந்து மீனம் 8 ஆம் வீடாக வருவதால் திருமண வாழ்வில் எப்போதும் ஒரு கஷ்டமான நிலை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த ராசிக்காரர்கள் இணைந்து திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்வில் ஆரம்ப காலம் சந்தோசமாக இருக்கும். சிறிது காலத்திலே தம்பதியினருக்கு வாழ்வில் பிரிவு வரக்கூடும்.

மேஷம் – விருச்சிகம் ராசி:

காலசக்கரத்தின் முதல் வீடான மேஷ ராசியும், காலசக்கரத்தின் 8 ஆம் வீடான விருச்சிக ராசியும் திருமண வாழ்க்கையில் இணைய கூடாத ராசிகள் ஆகும். விருச்சிக ராசியில் இருந்து மேஷ ராசியானது 6ஆம் வீட்டிலும், மேஷ ராசியில் இருந்து விருச்சிக ராசி 8 ஆம் வீட்டிலும் உள்ளது.

இந்த இரண்டு ராசிகளும் வாழ்வில் இணைந்தால் தம்பதியின் இடையில் புரிந்துகொள்ளும் நிலை ஏற்படாது. மேஷம் என்றாலே ஏமாற்றம் செய்யும் குணத்தினை உடைய ராசி என்று கூறுகிறார்கள்.

விருச்சிகம் ராசி என்பது பொறாமை குணம் கொண்டவையாகும். இந்த ராசிக்காரர்களிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்காததால் வாழ்க்கையில் விரிசல் நிகழும்.

ரிஷபம் – கும்பம் ராசி:

காலசக்கரத்தின் இரண்டாம் வீடான ரிஷபமும், காலசக்கரத்தின் 11ம் வீடு என்று சொல்லக்கூடிய கும்ப ராசியும் வாழ்க்கையில் சேரக்கூடாத ராசியாகும். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்தவர் முன் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ராசிக்காரர்கள் ஆவர்.

கும்ப ராசிக்காரர்களிடம் இந்த தன்மை இருக்காது. சில நேரத்தில் இரண்டு ராசிக்கும் இணைந்தாலும் வாழ்க்கையில் பொறாமை குணம் வந்துவிடும். ரிஷப ராசிக்காரர்கள் காதல், அன்பு, அழகு, பொறுமைகளை கொண்டுள்ள ராசியாகும். கும்ப ராசியானது எதிர்பாராத செயல்களை செய்வதால் இந்த இரண்டு ராசிகளும் இணையக்கூடாத ராசிகள் ஆகும்.

சிம்மம் – ரிஷபம் ராசி:

காலசக்கரத்தின் 5ஆம் வீடான சிம்ம ராசியும், காலசக்கரத்தின் 2ஆம் வீடான ரிஷபமும் ஒன்று சேரக்கூடாத ராசிகள் ஆகும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் உடல் மற்றும் மனதளவில் ஒரே மாதிரியான நிலையை உடையவர்கள். இந்த ராசிக்காரர்களின் போட்டி மனப்பான்மை வாழ்வின் நாளடைவில் பிரிவை ஏற்படுத்தி விடும்.

மிதுனம் – கடகம் ராசி:

காலசக்கரத்தின் மூன்றாம் வீடான மிதுன ராசியும், காலசக்கரத்தின் நான்காம் வீடான கடக ராசியும் திருமண வாழ்வில் சேரக்கூடாத ராசியாகும். கடக ராசியில் இருந்து மிதுனம் 12 ஆம் வீடாக வருவதால் இந்த தம்பதியினர்க்கு ஐனசெய்னபோகம் குறைவாக காணப்படும்.

இந்த இரண்டு ராசிக்காரர்களும் அமைதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படும் தம்பதியினர்கள். மிதுன ராசியினர் எப்போதும் பொறுமை குணத்தினை உடையவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்களிடம் அதிக அன்பினை செலுத்தினால் வாழ்வில் எந்த சங்கடமும் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

தனுசு – மகரம் ராசி:

காலசக்கரத்தின் ஒன்பதாம் வீடான தனுசு ராசியும், காலசக்கரத்தின் 10ஆம் வீடான மகர ராசியும் ஒன்றாக இணையக்கூடாத ராசியாகும். ஒன்று சேர்ந்தால் வாழ்வில் இரண்டு பேருக்கும் பிடிப்புகள் இருக்காது. தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் பக்தியினை உடையவர்கள். மகர ராசிக்காரர்கள் எப்போதும் உழைப்பினை கொண்டவர்களாய் இருப்பார்கள்.

மேலும் மகரத்திற்கு தனுசு ராசியானது 12 ஆம் வீடாக வருவதால் தமது வாழ்விற்கு தேவையான அனைத்தையும் தானாகவே தேடிக்கொள்வார்கள். முக்கியமாக இரண்டு தம்பதியினருக்கும் வாழ்வில் அன்பு அன்னோன்யம் இருக்காது. இதனால் இருவருக்கும் இடையில் நிறைய பிரச்சனைகள் வரும்.

கன்னி – மிதுனம் ராசி:

காலசக்கரத்தின் ஆறாம் வீடான கன்னி ராசியும், காலசக்கரத்தின் மூன்றாம் வீடான மிதுனமும் வாழ்க்கையில் சேர்ந்தால் குடும்பத்தில் எப்போதும் சங்கடங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த இரண்டு ராசியும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்குள் எப்போதும் பண பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும்.

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் அறிவுத்தன்மை அதிகமாக இருந்தாலும் மிதுன ராசியானது அன்பு மட்டும் போதும் என்று நினைக்கும் ராசியாகும். ஆனால் கன்னி ராசியானது பண சேமிப்பு முக்கியம் என்று நினைக்கும் ராசியாகும். இதனால் இந்த ராசிகள் இணையக்கூடாத ராசியாகும்.

மிதுனம் – விருச்சிகம் ராசி:

காலசக்கரத்தின் மூன்றாம் வீடான மிதுன ராசியும், காலசக்கரத்தின் எட்டாம் வீடான விருச்சிகமும் இணையக்கூடாத ராசியாகும். இந்த ராசிக்காரர்களிடம் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது. மேலும் மிதுனம் ராசியில் இருந்து விருச்சிகம் 6ஆம் வீடாக வருகிறது. விருச்சிகம் ராசியில் இருந்து மிதுனம் எட்டாம் வீடாக வருவதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் எந்த ஒரு விஷயத்தினையும் நேரடியாக கூறாமல் மனதுக்குள் வைத்து கொள்ளும் குணமுடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் மனம் விட்டு பேசாமல் இருப்பதால் வாழ்வில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

கும்பம் – கடகம் ராசி:

காலசக்கரத்தின் பதினொன்றாம் வீடான கும்ப ராசிக்காரர்களும் காலசக்கரத்தின் நான்காம் வீடான கடக ராசியும் ஒன்று சேரக்கூடாத ராசிகள் ஆகும். இவர்களுக்குள் எப்போதும் விரிசல் இருந்துகொண்டே இருக்கும். கும்பம் மற்றும் கடகம் 6,8 ஆம் ராசியாக வருவதனால் இந்த தம்பதியினருக்கு வாழ்க்கையில் எப்போதும் நம்பிக்கை குணம் இருக்காது. கும்ப ராசிக்காரர்கள் நினைத்தால் அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்ற முடியும்.

துலாம் – மீனம் ராசி:

காலசக்கரத்தின் ஏழாம் வீடான துலாம் ராசியும் காலசக்கரத்தின் 12ஆம் வீடான மீன ராசியும் வாழ்வில் இணைந்தால் எப்போதும் புது விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எப்படி முறையாக தீர்ப்பது என்று இவர்களுக்கு தெரியாது. இதனால் இந்த இரண்டு ராசியும் சேர்ந்தால் வாழ்க்கையானது செழிப்பாக இருக்காது.

மேஷம் – கடகம் ராசி:

காலசக்கரத்தின் முதல் வீடான மேஷ ராசியும், காலசக்கரத்தின் நான்காம் வீடான கடக ராசியும் ஒன்று சேர்ந்தால் மன வாழ்க்கையில் அன்னோன்யம் இருக்காது. இந்த இரண்டு ராசியினரும் எண்ணங்களால் ஒத்து போவார்கள். ஆனால் ஒருவரின் மேல் ஒருவர் அக்கறையாக இருக்க மாட்டார்கள். இதனால் இவர்களின் வாழ்வில் விரிசல் உண்டாகக்கூடும்.

நம் அனைவரின் வாழ்விலும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தினை இறைவன் கொடுத்த வரமாகும். உலகினில் பிறக்கும் அனைத்து ஆன்மாக்களிலும் இறைவன் இருக்கிறார். நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்து விஷயங்களும் நாம் செய்து வந்த நன்மை, தீமை அடிப்படையிலே இறைவன் நமக்கு கொடுக்கிறார். இதனால் வாழும் காலத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும்.

newதிருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement