நெற்றியில் விபூதி எப்படி பூச வேண்டும் என்று தெரியுமா.?

thiruneeru poosum murai in tamil

விபூதி பூசும் முறை

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நெற்றியில் விபூதி எப்படி பூச வேண்டும் தெரிந்துகொள்வோம். ஆன்மிகத்தில் எந்த விரலில் திருநீறு பூச வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அந்த மாதிரி இடுவது இல்லை. வீட்டில் அல்லது கோவில் எங்கு திருநீறு இட்டாலும் எப்படி திருநீறு பூசும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கியமன ஒன்று. நெற்றியில் திருநீறு பூசுவதால் நம் உடலில் அதிகமான சக்தி வெளிப்படும். வாங்க எப்படி திருநீறு இட வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம்.

Thiruneeru Aniyum Murai in Tamil:

பிரமன் எழுதிய விதியை முறியடித்து இறைவன் அருள் நெற்றியில் திருநீறு வைப்பதால் கிடைக்கிறது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. இந்த விபூதியை எந்த விரலால் பூச வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

விபூதியை இடுவதற்கு மோதிர விரலை பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல் பயன்படுத்தி விபூதி வைக்க கூடாது. ஆள்காட்டி விரலை பயன்படுத்தி விபூதி இட்டால் விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போகும். நடு விரலை பயன்படுத்தி விபூதி இட்டால் மன குழப்பத்துடன் இருப்பீர்கள். சுண்டி விரல் பயன்படுத்தி விபூதி பூச கூடாது. மோதிர விரலை பயன்படுத்தி விபூதி பூசும் போது நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெறும். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ விளக்கை அணைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

திருநீறு பூசுவது எப்படி.?

நெற்றி முழுவதும் திருநீறு அணிந்தால் முன்வினை பாவங்கள் அழிந்து போகும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

நமது இரு புருவங்களின் நடுவில் விபூதி பூச வேண்டும். நெஞ்சு குழியில் விபூதி இட்டு கொண்டால் இறைவன் அருள் கிடைக்கும். தொண்டை குழியில் விபூதி பூசி கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

விபூதி வாங்கும் முறை:

விபூதி கீழே நின்று கொண்டு, விபூதி வாங்குபவர் மேலே நின்று வாங்க கூடாது.

நமது வீட்டின் திண்ணை நின்றும் திருநீறு வாங்க கூடாது. உட்கார்ந்து கொண்டும் விபூதி வாங்க கூடாது.

விபூதி உங்களுக்கு ஒருவர் கொடுக்கிறார் என்றார் வேண்டாம்  என்று சொல்ல கூடாது.

விபூதியை கோவில் தூண்களில் வைக்க கூடாது. காகிதத்தில் மடித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

தலையை கீழே குனிந்து கொண்டும், பேசி கொண்டும் விபூதி பூச கூடாது.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்