கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்..!

karu pathiyum symptoms tamil

கரு பதியும் அறிகுறிகள்..! Karu Pathiyum Symptoms Tamil..!

வணக்கம் தோழிகளே.. பெண்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் என்னெவென்றால் அது அவர்களது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் என்று சொல்லலாம். பொதுவாக கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து செல்லுமாம். கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் நிலையாகும் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும். அதை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்தறியப்போகிறோம் சரி வாங்க கர்ப்பமாக இருப்பதால் வெளிப்படும் அறிகுறிகள் சிலவற்றை இங்கு நாம் படித்தறியலாம்.

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:

திடீரென்று உடல் எடை அதிகரிக்கும்:

உடல் எடை

சில பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகின்றன அதாவது இது போன்ற காலங்களில் சரியாக சாப்பிடாமல் இருந்து உடல் எடையானது திடீரென்று அதிகரித்தால், அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

காலை உடல் நலமின்மை:

கரு பதியும் அறிகுறிகள் = இத்தகைய கர்ப்பம் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கின்றனர். காலை உடல் நலமின்மை என்பது பெரும்பாலான பெண்களுக்கு படுக்கையை விட்டு எழும் காலை தருணத்தில் இருந்தே ஆரம்பமாகும். சிலருக்கு இது மாலை அல்லது இரவு வேளைகளில் கூட ஏற்படலாம். அதேபோல் பல பெண்கள் நாள் முழுவதும் கூட குமட்டல், வாந்தி, சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும்.

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

கரு பதியும் அறிகுறிகள் – பொதுவாக ஒரு பெண் கருத்தரிக்கும் போது ​​அவளது மார்பகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் அதனை அந்த பெண்ணால் உணர முடியும். குழந்தைக்கு தேவையான தாய்பால் சுரப்பிற்காக ஹார்மோன்கள் தயாராவதால், சில அசெளகரியமான உணர்வுகள் ஏற்படும். அதாவது திடீரென மார்பகங்கள் பெரிதாகி விட்டது போன்ற உணர்வு, மென்மையான அல்லது கனத்த மார்பகங்களை உணரலாம். மார்பக காம்புகள் தடித்து, கருமையாக மாற ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் பெண் கர்ப்பம் தரித்துவிட்டதை உறுதி செய்யக்கூடிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

கரு பதியும் அறிகுறிகள் – அடிக்கடி சிறுநீர் கழிப்பது கூட ஒரு பெண் கருத்தரித்ததுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். அதாவது கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறிகளில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஒன்று. கர்ப்ப காலத்தில் உடல் திரவங்கள் அதிகரித்து சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீரகம் விரைவாக செயல்பட வழிவகுக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் கூட நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாமல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

மாதவிடாய்  தள்ளிப்போவது:

mathavidai thalli poga karanam tamil

கரு பதியும் அறிகுறிகள் – திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்டிர்க்கு மாதவிடாய் தள்ளிப்போவது என்பது கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் மிக முக்கியமான அறிகுறியாகும். ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும்.

ஆக குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களின் மாதவிடாய் ஆனது 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள் கருவுற்ற அறிகுறிகள் வெளிப்படும். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு கருத்தரித்த பின்னரும் மாதவிடாய் வரும் அரிதான நிகழ்வுகள் உள்ளன, ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது உண்டு. முட்டை கருவுற்றதற்கான அறிகுறியாக மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறது.

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை

 

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!
சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்
கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!
சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil