கேன்சர், சுகர் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் நித்தியகல்யாணி பூ..!

Advertisement

நித்திய கல்யாணி பூ மருத்துவ பயன்கள் | Catharanthus Roseus Uses in Tamil

மலர்கள் என்றாலே மிகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சில மலர்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. சில மலர்கள் கூந்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது, சில மலர்கள் அழகிற்க்காக வளர்க்கப்படுகிறது, சில மலர்கள் மருத்துவத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது மருத்துவத்திற்க்காக பயன்படுத்தக்கூடிய மலர்களை பற்றித்தான். மருத்துவத்திற்கு நிறைய வகையான மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் நித்திய கல்யாணி பூ, இந்த பூ குறிப்பாக கேன்சர், சுகர், பையில்ஸ் போன்ற பலவகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆக இன்றைய பதிவில் நித்தியகல்யாணி பூவின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

நித்திய கல்யாணி பூ in English (Catharanthus roseus):

Catharanthus roseus

இந்த நித்தியகல்யாணி பூ பார்ப்பதற்கு மேல் படத்தில் உள்ளது போல் தான் இருக்கும். இந்த பூ செடியில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று வெள்ளை மற்றொன்று இளஞ்சிவப்பு அதாவது ரோஸ் நிறத்தில் இருக்கும். இந்த இரண்டு செடிகளில் எது கிடைத்தாலும் நீங்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்.

Nithya Kalyani Flower Medicinal Uses in Tamil

புற்றுநோய்க்கு:

1980-துகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த மலர் செடியில் நான்குவிதமான முக்கிய ஆல்கலாய்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் இரண்டு முக்கியமான ஆல்கலாய்டுகள் என்னவென்றால் வெண் க்ரீஸ்ட்டின், வின்பிளாஸ்ட்டின் ஆகும். இவை இரண்டும் புற்றுநோய்க்கு இன்று வரை மருந்தாக பயன்படுத்திவருகின்றன.

சுகர் குணமாக:

டயாபட்டீஸ் நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கும்பொழுது நீங்கள் கண்டிப்பாக மருந்துகள் எடுத்துகொல்வர்கள். அதனுடன் இந்த நித்தியகல்யாணி பூவை ஐந்து அல்லது ஆறு பறித்து சுத்தம் செய்துவிட்டு, சிறிதளவு கருஞ்சிரகத்தையும் சேர்த்து கஷாயம் போல் செய்து கொடுத்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதுடன் உல் உறுப்புகள் சேதம் (Internal Organ Damage) அடைவதையும் தடுக்கலாம்.

மூலம்:

மூலம்

பையில்ஸ் என்று சொல்லக்கூடிய மூலம் நோய் உள்ளவர்கள் நித்தியகல்யாணி பூவின் இதழ்களை மட்டும் பறித்து அதாவது அவற்றில் இருக்கும் காம்புகளை அகற்றிவிட்டு இதழ்களை மட்டும் பறித்து அதனுடன் இரண்டு சிட்டிகை கருஞ்சீரகம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைடம்ளர் வரும் அளவு காய்ச்சி வடிகட்டி அருந்திவந்தால் மூலம் மற்றும் மூலத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

முகப்பருக்கள் மறை:

pimples

ஆண்கள், பெண்களுக்கு இருக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு இந்த முகப்பரு பிரச்சனையை குணப்படுத்த ஒரு அருமையான வழிகள் இருக்கிறது. அதாவது நித்திய கல்யாணியின் இலை மற்றும் பூக்களை சிறிதளவு பறித்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது பூசி வர ஒரு 2 நாட்களிலேயே முகப்பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

புண்கள் ஆற:

வெளிப்புறங்களில் ஏதேனும் புண்கள் ஏற்பட்டால் அதனை குணப்படுத்த நித்தியகல்யாணியின் இலைகளை புண்களுக்கு வெளி மருந்தாக அரைத்து பயன்படுத்தலாம். அதாவது இலைகளை அரைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தைலமாக காய்ச்சி. அந்த தைலத்தை புண்களுக்கு பயன்படுத்தலாம் இதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement