கர்ப்பிணிகள் சாப்பிட கூடாத உணவுகள்
பெண்கள் தாய்மை அடைந்ததும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாய்மை அடைந்த நாட்களிலுருந்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த செயலை செய்யலாம், செய்ய கூடாது என்று சொல்வார்கள். அதோடு இல்லாமல் இந்த உணவுகள் சாப்பிட்டால் குழந்தைக்கு நல்லது என்று சாப்பிட சொல்வார்கள். 5 மாதத்திற்கு பிறகு இந்த உணவுகள் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். இந்த பதிவில் 5 மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்று படித்து தெரிந்து கொள்ளவும்.
5 மாத கர்ப்பிணிகள் சாப்பிட கூடாத உணவுகள்:
குளிர்ச்சியான உணவுகள்:
குளிர்ச்சையான உணவுளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சர்க்கரையில் கலோரிகள் உள்ளன. இதற்கு பதிலாக பழச்சாற்றை எடுத்து கொள்ளவும்.
டீ, காபி:
5 மாத கர்ப்பிணிகள் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக பால் எடுத்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் அதிகமாக டீ, காபி குடிப்பது குழந்தை பிறந்த பிறகு அமைதியின்மை, தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
பழங்கள்:
பப்பாளி. மாதுளை, அன்னாசிப்பழம் போன்ற பழங்களை சாப்பிட கூடாது. இந்த பழங்களை சாப்பிட்டால் கருவிற்கு ஆபத்து ஏற்படும்.
கொழுப்பு நிறைந்த உணவு:
பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள், பீட்ஸா போன்றவை அதிகமாக சாப்பிட கூடாது. இவை தேவையற்ற கொழுப்புகளை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் எந்த உணவு சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் தெரியுமா?
5 மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்:
தினமும் 2 கிளாஸ் பால் குடிக்க வேண்டும். உங்களின் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு பால் சிறந்த உணவாக இருக்கும்.
புரதம் நிறைந்த உணவுகள்:
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு புரதம் சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது முக்கியமானது. அதனால் தசைகள், தோல், உறுப்புகள் வளர்ச்சியடைவதற்கு புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கோழி, பருப்பு வகைகள், முட்டை மற்றும் தானியங்கள் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து உணவுகள்:
மலசிக்கல் பிரச்சனை வராமல் இருக்க நார்சத்து நிறைந்த உணவுகளான முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் போன்றவை சாப்பிட வேண்டும்.
பழங்கள்:
ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழங்கள், கிவி, ஆரஞ்சு. பெர்ரி மற்றும் உலர் திராட்சை போன்றவை சேர்க்கலாம்.
கீரை வகைகள் சாப்பிட வேண்டும்:
உணவில் கீரை, வெந்தயம் மற்றும் ப்ரோக்கோலியை சேர்த்துக் கொள்ளுங்கள், இது இரும்புச்சத்துக்கான உடலின் தேவையை பூர்த்தி செய்கிறது.
தானியங்கள்:
கோதுமை, ராகி, அரிசி, சோளம் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது வளரும் குழந்தையின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தின் தேவையை நன்றாக பூர்த்தி செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |