நீராவி பிடிப்பதன் நன்மைகள் | Aavi Pidithal Benefits

நீராவி பிடிப்பதன் நன்மைகள் | Aavi Pidithal Benefits

வணக்கம் நண்பர்களே உலகம் முழுவதும் பலவகையான நோய்கள் நம்மை இன்று வரைக்கும் தாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. உடலுக்கோ, மனத்திற்கோ என்ன பாதிப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் நம்முள் இருந்தால் அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை நாம் சமாளித்து விடலாம். சர்வ சாதாரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள் எது என்றால்? சளி, இருமல், காய்ச்சல் தலைவலி என்று தான் சொல்ல வேண்டும். இந்த பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை விட வீட்டிலேயே சிறிது நேரம் நீராவி பிடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சரி இந்த பதிவில் ஆவி பிடிப்பதன் நன்மைகள் பற்றி படித்தறியலாம் வாங்க..!

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits:

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், மூக்கில் நீர்வடிதல், நீர் கோர்வை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள் நீராவி பிடிப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆவி பிடிப்பதன் மூலம் சைனஸ் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கு குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்வதுடன். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.

சூடான நீரில் சிலவகையான மூலிகை பொருட்களை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை நாம் ஆவி பிடிப்பதன் மூலம் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேற்றப்படுகிறது.

ஆவி பிடிப்பதால் சருமத் துளைகள் விரிவடைந்து, அவற்றில் உள்ள அழுக்குகள் முழுவதும் விரைவாக வெளியேறிவிடும். சருமமும் மிகவும் சாப்டாக இருக்கும். இருப்பினும் முகத்தில் ஆவி பிடித்த பின், சுத்தமான துணியைக் கொண்டு முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

மேலும் ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் நீங்கிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்–> சளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..!

நீராவி பிடிக்கும் முறை:

aavi pidithal benefits

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அவற்றில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின் அவரில் சிறிதளவு மஞ்சள் தூள், நொச்சி அல்லது ஆரஸ்பதி இலை சிறிதளவு, துளசி, புதினா, ஓமவல்லி இலை, மிளகு, எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றில் சிறிதளவு, கொத்தமல்லி விதை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின் அடுப்பில் இருந்து பத்திரமாக இறக்கி அந்த நீரில் இருந்து வெளியேறும் ஆவியை முகத்தை காட்டி நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது போர்வையை போர்த்திக்கொண்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்கு ஆவி பிடியுங்கள். இவ்வாறு ஆவி பிடிக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும். ஆகவே ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை, வேர்வையை துடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. ஆகவே அந்த போர்வையை துவைத்த பின் பயன்படுத்துங்கள்.

இதையும் கிளிக் செய்து பிடியுங்கள்–> சளி குணமாக இயற்கை வைத்தியம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil