காடை முட்டை பயன்கள் | Benefits of Quail Eggs | Kadai Muttai Benefits in Tamil

Advertisement

காடை முட்டை நன்மைகள் | Benefits of Quail Eggs in Tamil | Kaadai Egg Benefits in Tamil

Benefits of Quail Eggs:- வணக்கம் நண்பர்களே அசைவ உணவுகளில் முட்டைக்கென்று தனி இடமுள்ளது. அந்த வகையில் சமீப காலமாக அசைவ பிரியர்கள் காடை முட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதற்கு என்ன காரணமென்றால் காடை முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது தான் முதல் காரணம் என்று சொல்லலாம். இந்த காடை முட்டை பார்ப்பதற்கு கொஞ்சம் சிறிதாகவும், இதன் முட்டை ஓடு சற்று கரும்புள்ளிகளுடன் காணப்படும். இந்த காடை முட்டையை சாப்பிடுவதினால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும் என்றால் நம்புவீர்களா..? ஆம் இந்த காடை முட்டையை (quail eggs in tamil) சாப்பிடுவதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சோகை, அல்சர் போன்ற பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். சரி இந்த பதிவில் காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது, காடை முட்டை சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதனை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த பதிவில் காடை முட்டையில் உள்ள பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சரி 100 கிராம் காடை முட்டையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.

Benefits of Quail Eggs

  1. பொட்டாசியம் 132 மில்லி கிராம்,
  2. சோடியம் 141 மில்லிகிராம்,
  3. கார்போஹைட்ரேட் 0.4 கிராம்,
  4. சர்க்கரை சத்து 0.4 கிராம்,
  5. புரதச்சத்து 13 கிராம்,
  6. விட்டமின் ஏ 10%,
  7. கால்சியம் 6%,
  8. விட்டமின் டி 13%,
  9. விட்டமின் பி12 26%,
  10. மெக்னீசியம் 3% 

ஞாபக சக்தியை அதிகரிக்க:

Benefits of Quail Eggs in Tamil: காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது இந்த காடை முட்டையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் தங்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க

சரும அழகை அதிகரிக்க:

Kadai Muttai Benefits in Tamil: சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முட்டையின் வெள்ளை கரு பயன்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பின் கோழி முட்டையை விட காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும அழகை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே சருமத்தை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க நினைப்பவர்கள் இந்த காடை முட்டை பயன்படுத்தலாம்.

இரத்த சோகை குணமாக:

anemia

Kaadai Egg Benefits in Tamil: இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க காடை முட்டையை சாப்பிடலாம். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் இந்த காடை முட்டையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு நன்றாக பராமரிக்கப்படுகிறது.

காடை முட்டை பயன்கள்:

baby

Quail egg benefits in tamil: வளரும் குழந்தைகளுக்கு இந்த காடை முட்டையை தினமும் கொடுத்து வருவதினால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக நன்றாக செயல்படும். அதாவது குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் சீராக இருக்கும். மேலும் உடல் நன்கு வலிமையாக இருக்கும். குறிப்பாக எந்த ஒரு நோய் தொற்றுகளும் குழந்தைகளை எளிதில் அண்டாமல் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அலர்ஜி பிரச்சனையை குணப்படுத்த:

skin allergy

Kadai Muttai Benefits in Tamil: காடை முட்டையில் ஓவோமுகாய்டு என்று சொல்லக்கூடிய புரோட்டீன் உள்ளது. ஆகவே அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இந்த காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால் உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

புற்றுநோய்க்கு – காடை முட்டை பயன்கள்:

காடை முட்டையின் பயன்கள்/kadai muttai benefits in tamil:- காடை முட்டையில் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் கார்சினோஜெனிக் (carcinogen) என்கின்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் நமக்கு வராமல் தடுக்கவும், புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கவும் தினமும் ஒரு காடை  முட்டையை சாப்பிட்டு வரலாம்.

பார்வை திறனை அதிகரிக்க:-

Kadai Muttai Health Benefits in Tamil:- இந்த காடை முட்டையில் விட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. எனவே தங்கள் பார்வை திறனை பாதுகாக்க காடை முட்டை பயன்படுகிறது. சிறுவயதிலேயே பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த காடை முட்டையை தினமும் உணவில் சேர்த்து வருவதினால் தங்கள் குழந்தையின் பார்வை திறனை அதிகரிக்கலாம்.

அல்சர் குணமாக:

Quail Eggs Benefits in Tamil:- அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காடை முட்டையை சாப்பிடுவதினால், செரிமான பாதையில் அல்சரால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் புண்கள் அனைத்தும் குணமாகும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க:-

Kadai Egg Benefits in Tamil:- காடை முட்டை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்கள் மற்றும் டாக்ஸின்களை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். மேலும் காடை முட்டையை பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதினால் பிரச்சனை கூடிய விரைவில் குணமாகும்.

குறிப்பு:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் இந்த காடை முட்டையை சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பின் சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement