மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்
Breast Cancer Symptoms in Tamil: பெண்கள் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். மார்பக புற்றுநோயில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. இப்போது உள்ள காலத்தில் பெண்கள் அனைவருக்கும் மார்பகத்தில் புற்றுநோய் வருவது இயல்பாகி விட்டது. மார்பக புற்றுநோய் பரிசோதனையையும் தொடர்ச்சியாக செய்து வருவது உங்களை மார்பக புற்றுநோய் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.
ஆனால் பல பேருக்கு இது தெரிவதில்லை. பெண்ணின் மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். மார்பக புற்று நோய் ஆரம்பத்திலே வருவதில்லை. முதலில் அதற்கான அறிகுறிகள் தோன்றும். பின்னரே அதன் பாதிப்பு பலமடங்கு பெருக ஆரம்பிக்கும். இப்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறி என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
ஆரம்பகால அறிகுறிகள்:
- சருமத்தில் மாற்றம் அடையும், வீக்கம், சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
- இரண்டு மார்பகத்தின் வடிவம், அளவு மாற்றம் பெறும்.
- இரண்டு மார்பக காம்புகளில் அல்லது ஒரு காம்பில் மாற்றங்கள் தென்படலாம்.
- தாய்ப்பாலைத் தவிர முலைக்காம்பில் கசிவு தன்மை ஏற்படும்.
- மார்பகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி ஏற்படும்.
- மார்பகத்தின் உட்பகுதியில் கட்டிகள் வரும்.
- இன்வேசிவ் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் (மார்பகத்தின் உள்ளே ஏற்படும் அறிகுறிகள்) எரிச்சல் அல்லது மார்பகத்தில் அரிப்பு உண்டாகும்.
- மார்பகம் வேறு நிறத்தில் தென்படும்.
- மார்பக வடிவில் அல்லது அளவில் அதிகரிப்பு ஏற்படுதல்.
- மார்பகத்தை தொடும் போது கடினமாக அல்லது வெப்ப நிலையில் உள்ளது போன்று இருக்கும்.
- மார்பக காம்புகளில் சிவப்பு நிறம் ஏற்படும்.
- மார்பக கட்டி கடினமாகுதல்
- சிவந்து போதல் அல்லது மார்பக சருமம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றுதல்.
- சில நேரங்களில் மார்கத்தில் ஏற்படும் தொற்று பிரச்சனை காரணமாக கூட சிவந்த நிலை ஆகலாம்.
- மார்பக காம்புகள் வீங்கி இருப்பதும் தொற்று காரணமாக இருக்கலாம்.
- எனவே அதற்காக கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள்.
- மார்பகத்தில் கட்டி ஏற்படும் அல்லது மார்பகம் கனமாக இருப்பது போன்று உணர்தல் மார்பகத்தின் எல்லா பகுதியும் வீக்கத்துடன் தென்படுதல்.
- தோல் எரிச்சல் அல்லது சுறுசுறுக்கென்ற வலி மார்பகம் அல்லது மார்பக காம்புகளில் வலி ஏற்படுதல். முலைக்காம்பு உள் நோக்கி திரும்புதல்.
- மார்பக சருமம் சிவந்து, செதிலாக அல்லது தடினமாக மாறுதல்.
- முலைக்காம்பு பகுதியானது வெளியேற்றம் அடையும்.
- அக்குள் பகுதியில் நிணநீர் வீக்கம்.
எச்.ஐ.வி அறிகுறிகள் |
மார்பக குழாயில் ஏற்படும் அறிகுறி – மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:
- பெண்களுக்கு மார்பக குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இதனால் இதை வெகு விரைவில் கண்டறிவது கடினம்.
- மார்பக குழாய்களில் ஏற்படும் கட்டியை கொண்டு நீங்கள் மார்பக புற்றுநோயை அறியலாம். இல்லையென்றால் மேமோகிராம் மூலம் கண்டறியலாம்.
லோபுலர் கார்சினோமா அறிகுறிகள்:
- லோபுலர் கார்சினோமா புற்றுநோய் எந்த அறிகுறியையும் காட்டாது. மேமோகிராம் மூலம் கூட இதை கண்டறிய முடியாது. இதை மார்பக பயாப்ஸி மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
- ஒரு வேளை ஒரு நபருக்கு லோபுலர் கார்சினோமா செல்கள் இருந்தால் நுண்ணோக்கி வழியாக பார்க்கும் போது அதன் அசாதாரண வளர்ச்சி தெரியும்.
அழற்சி வகை மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:
- பெண்களுக்கு ஏற்படும் இந்த அழற்சி வகை மார்பக புற்றுநோய்யானது கட்டிகளை எளிமையாக உண்டுப்படுத்தும். இந்த புற்றுநோயினையும் மேமோகிராம் வழியாக நீங்கள் பார்க்க முடியாது. அழற்சி வகை மார்பக புற்றுநோய்களை ஒரு சில அறிகுறிகளை வைத்து நீங்கள் அறியலாம்.
- மார்பகத்தில் சிவந்த நிலை அடைதல், மார்பில் வீக்கம், பெண்கள் மார்பில் எரிச்சல் தன்மை அல்லது அரிப்பு ஏற்படும்.
- மார்பகத்தின் சருமத்தில் ஆரஞ்சு நிறம் தோன்றுதல், குழி போன்று தென்படுதல்.
- மார்பக பகுதியானது கடினமாக இருப்பது போன்று இருக்கும்.
- ஒரு மார்பகம் மற்றொரு மார்பகத்தை விட பெரியதாக காட்சியளிக்கும்.
- பெண்களுக்கு மார்பக காம்பானது உள்நோக்கி இருக்கும்.
- பெண்களுக்கு அக்குள் பகுதியில் அல்லது காலர் எலும்புக்கு கீழ் பகுதியில் நிணநீர் வீக்கம் ஏற்படும்.
ஆன்டிபயாடிக் மருந்துக்கு பிறகு மார்பக பகுதியில் ஏற்படக்கூடிய மாற்றம்:
- பெண்களுக்கு ஏற்படும் அழற்சி மார்பக புற்றுநோய்யானது சாதாரணமான புற்றுநோய் கட்டிகளை போன்று இருக்காது. இது கட்டிகளை ஏற்படுத்தாது. அதனால் மருத்துவ பரிசோதனை மற்றும் மேமோகிராம் மூலம் இதை நாம் பார்க்க முடியாது. மருத்துவர்கள் இந்த புற்றுநோயை அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட பார்க்க முடியாது என்கிறார்கள். ஆனால் இந்த புற்று நோயினால் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக காண முடியும்.
- இதன் அறிகுறிகள் விரைவாக தோன்ற ஆரம்பிக்கும். மேலும் நோய் வேகமாக வளர ஆரம்பிக்கும். உங்களுடைய மார்பகத்தின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |