சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ அதனுடைய தீமைகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Disadvantages of Peanut Oil in Tamil

தினமும் நம்முடைய உடல் ஆரோக்கியம் கருதி நாம் சில வகையான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். அப்படி நாம் சாப்பிடும் அனைத்து சாப்பாடுகளும் சத்தானது என்று நினைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றோம். ஆனால் நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் நூற்றில் 75% சத்து நிறைந்து இருந்தாலும் கூட 25% ஆனது சில தீமைகள் அதில் காணப்படுகிறது. அதிலும் இன்றைய காலத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எண்ணெயில் பொறித்த உணவு மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை தான் விரும்புகிறார்கள். இத்தகைய உணவு பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையான எண்ணெயில் தான் சமைக்கப்படுகிறது. அந்த வகையில் உங்களுடைய வீட்டில் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது உள்ள தீமைகள் என்னவென்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்

கடலை எண்ணெயில் உள்ள சத்துகள்:

 கடலை எண்ணெய் தீமைகள்

 கடலை எண்ணெயில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K, வைட்டமின் B6, வைட்டமின் B12, வைட்டமின் D, வைட்டமின் E கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, சோடியம், கார்போஹட்ரேட், கொலஸ்ட்ரால், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்றும் கலோரிகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.  

கடலை எண்ணெய் தீமைகள்:

உடலில் அலர்ஜி:

உடலில் அலர்ஜி

கடலை எண்ணெயில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கூட இது சிலருக்கு உடலில் அலர்ஜி, சிவந்து போதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அது அளவுக்கு அதிகமாக மாறும் போது உடலுக்கு தீமை விளைவிக்க கூடியதாக உள்ளது.

உடல் எடை அதிகரிக்க:

உடல் எடை அதிகரிக்க

வைட்டமின் சத்துக்கள் நம்முடைய உடலுக்கு பயன் அளிக்கக்கூடியதாக இருந்தாலும் கூட அதனை சரியான அளவில் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் கடலை எண்ணெயில் வைட்டமின் E சத்து இருப்பதால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்க கூடும்.

கல்லீரல் பிரச்சனை:

கல்லீரல் பிரச்சனைகல்லீரல் பிரச்சனைக்கு ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆனது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றக உள்ளது. ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களை நாம் அதிகமாக சேர்த்து கொள்வதன் மூலம் இது கல்லீரல் பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.

இருதய நோய் பிரச்சனை:

இருதய நோய் பிரச்சனை

அதுமட்டும் இல்லாமல் இத்தகைய கடலை எண்ணெய் சார்ந்த உணவினை நாம் அதிகமாக சாப்பிடும் போது இருதய நோய் பிரச்சனை வருவதற்கும் காரணமாக உள்ளது. ஆகையால் இருதய நோய் உள்ளவர்களும் மற்றும் சாதாரணமாக உள்ளவர்களும் கடலை எண்ணெயினை அளவோடு மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் பிரச்சனை:

மூச்சு திணறல்

கடலை எண்ணெயினால் சமைத்த உணவினை நாம் அளவோடு எடுத்துக்கொண்டால் மட்டுமே உடலுக்கு நன்மை. அதுவே அளவுக்கு அதிகாமாக சாப்பிடும் போது இதில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நம்முடைய உடலில் ஆக்சிஜன் பிரச்சனை வருவதற்கு காரணமாக அமைகிறது.

மேலும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையினையும் வரச்செய்வதற்கு காரணமாக அமைகிறது.

கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.. 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement