வறட்டு இருமலை குணப்படுத்தும் மஞ்சள் | Dry Cough Home Remedies in Tamil

வறட்டு இருமல் குணமாக வைத்தியம் | Dry Cough Home Remedies in Tamil

Turmeric for Dry Cough – பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் வறட்டு இருமலை குணப்படுத்த மஞ்சளை மட்டும் பயன்படுத்தி செய்ய கூடிய சிலவகையான ஹோம் ரெமடியை பார்க்கலாம். வறட்டு இருமல் என்பது சிறிய குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை குணப்படுத்த பலவகையான இயறக்கை வைத்தியம் இருக்கிறது. இருந்தாலும் இன்று நாம் பார்க்க இருப்பது மஞ்சள் மட்டும் தான். சரி வாங்க மஞ்சளை பயன்படுத்தி வறட்டு இருமலை எப்படி குணப்படுத்தலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

வறட்டு இருமல் சளிக்கு மருந்து – Dry Cough and Throat Pain Home Remedies in Tamil:

தேவையான பொருள்:

  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • வெந்நீர் – ஒரு கிளாஸ்.

இதையும் கிளிக் செய்து படித்து பயன்பெறுங்கள் 👇
ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!

அருந்துமுறைல்:

மஞ்சள் தூள்

ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும்.

ஒரு நாளுக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் செய்து அருந்தலாம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரலில் படிந்திருக்கும் சளி அனைத்தும் வெளியே வந்துவிடும். அதற்கு மேலும் சளி குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்து.

வறட்டு இருமல் சரியாக – Turmeric for Dry Cough:

1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் அதிமதுரம் பொடி, மற்றும் 1/2 ஸ்பூன் தேன் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு உறங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். நுரையீரலில் கட்டிக்கொண்டிருக்கும் சளி முழுமையாக வெளியே வந்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படித்து பயன்பெறுங்கள் 👇
இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..!

வறட்டு இருமல் குணமாக வீட்டு வைத்தியம்:

வறட்டு இருமல் குணமாக மிக எளிமையான வீட்டு வைத்தியம் இதுதான், அதாவது 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்களுக்கு எப்போதெல்லாம் வறட்டு இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் செய்து சாப்பிடுங்கள். உடனே பிரச்சனை குணமாகும். மற்றும் சளியும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துவிடும்.

வறட்டு இருமல் உடனடி தீர்வு – Dry Cough Home Remedies in Tamil:

இரவு உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் சூடான பாலில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக காலத்து. அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் வறட்டு இருமல் உடனடியாக சரி ஆகும். அதேபோல் எப்போதெல்லாம் வறட்டு இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இதனை தயார் செய்து பருகலாம். இதன் மூலம் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படித்து பயன்பெறுங்கள் 👇
வறட்டு இருமல் வராமல் தடுப்பதற்கு பச்சை திராட்சையா.!

நெஞ்சு சளி வறட்டு இருமல் குணமாக:

நெஞ்சி சளி மற்றும் வறட்டு இருமல் குணமாக ஒரு அருமையான வைத்தியம் இது. ஒரு ஸ்பூன் மிளகினை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள், பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வறுத்த மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் பருக வேண்டும். இப்படி அருந்துவதன் மூலம் நெஞ்சு சளி வறட்டு இருமல் உடனடியாக குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil