ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Advertisement

முடி சாயத்தின் பக்க விளைவுகள் | Hair Dye Side Effects in Tamil

Hair Dye Side Effects in Tamil – வணக்கம் நண்பர்களே.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இளம் வயதிலேயே இளநரை பிரச்சனை வந்துவிடுகிறது. ஹேர் டையை அதிகளவு பயன்படுத்துகின்றன. சில இளம் வயதினர் அவர்களுக்கு பிடித்தமாதிரி தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்துகொள்கின்றன. உண்மையாக ஹேர் டை மற்றும் ஹேர் கலரிங் செய்துகொள்வதினால் என்ன பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாக இருக்கும் என்று நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்றால் அதுக்கு அப்பறம் நீங்கள் கண்டிப்பா ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை செய்துகொள்ள மாட்டீர்கள். சரி வாங்க ஹேர் டை பயன்படுத்துவதினால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஹேர் டை பக்க விளைவுகள்!!!

ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை:

பொதுவாக இந்த ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை இரண்டுமே ஒன்று தான். இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுமே ஒன்றாக தான் இருக்கும். அந்த பக்க விளைவுகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் 👉 ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க

புற்று நோய்:

முன்பெல்லாம் ஹேர் டை தயார் செய்வதற்கு குறைந்த அளவிலேயே தான் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது ஹேர் டை மற்றும் ஹேர் கலரிங் போன்றவற்றை தயார் செய்ய அதிகளவு கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இதனை நாம் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு இருந்தோம் என்றால் புற்று நோய் ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இதனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கருவுறும் தன்மை குறையும்:

ஹேர் டையில் பயன்படுத்தப்படும் ஆபத்தான கெமிக்கல் ஆண் மற்றும் பெண்ணின் கருவுறும் தன்மையை பதிக்குமாம். ஆகவே செயற்கையான முனையில் டை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கையான முறையில் ஹேர் டை தயாரித்து தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள் 👉 நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை

ஸ்கின் அலர்ஜி:

பொதுவாக ஹேர் டை, ஹேர் கலர் அனைவருக்குமே ஒற்றுக்கொள்ளும் என்று சொல்லிவிடமுடியாது. சிலருக்கு ஒற்றுக்கொள்ளும், சிலருக்கு ஒற்றுக்கொள்ளாது. ஹேர் டை ஒற்றுக்கொள்ளாதவர்களுக்கு சில ஸ்கின் அலர்ஜிகளை ஏற்படுத்தும் ஆகவே அப்படிப்பட்டவர்கள் ஹேர் கலர், ஹேர் டை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பார்வை கோளாறு:

தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்திக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் கண்கள் மீது அக்கறை செலுத்தும் நபர் என்றால் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement