தொடர்ந்து ஏப்பம் வருவதனை குறைப்பதற்க்கு இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

eppam adikadi vara karanam

ஏப்பம் எதனால் வருகிறது

வணக்கம் நண்பர்களே..! சாப்பாடு என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. அப்படி நாம் சாப்பிடும் சாப்பாடு எவ்வளவு தான் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் அதில் ஒரு சில பிரச்சனைகள் வருகின்றன. அத்தகைய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று ஏப்பம் வருவது. இந்த பிரச்சனை இன்றைய கால கட்டங்களில் பலருக்கு இருக்கிறது. அந்த ஏப்பம் வருவதற்கான காரணம் மற்றும் தொடர்ந்து ஏப்பம் வருவதை குறைப்பதற்கான வழிகள் என்ன என்பதை பற்றி இன்றைய ஆரோக்கிய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?

ஏப்பம் வருவது ஏன்:

நாம் அதிகமான காற்றை சுவாசிப்பதன் மூலம் அந்த காற்று ஏப்பமாக வெளி வருகிறது. இதுவே ஏப்பம் வருவதற்கு முக்கியாக காரணமாக இருக்கிறது.

ஏப்பம் தொடர்ந்து வருவதற்கான காரணம்:

ஏப்பம் வருவது என்பது இயல்பாக இருந்தாலும் ஒரு சிலருக்கு நிறைய பேர் இருக்கும் கூட்டத்தில் தொடர்ந்து ஏப்பம் வரும் போது ஒரு மாதிரியாக இருக்கும். அந்த மாதிரி தொடர் ஏப்பம் வர காரணம் என்ன என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் 3 வேளையும் சாப்பிடும் உணவு நேரம் மாறுபடுவதன் மூலம் தொடர் ஏப்பம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

அதுபோல நீங்கள் ஏதாவது 1வேளை உணவு சாப்பிடவில்லை என்றாலும் கூட வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும். அதுபோன்ற நேரங்களில் தொடர் ஏப்பம் வரும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றாக பசி உணர்வு இருக்கும் நேரத்தில் சாப்பிடாமல் அதற்கு பிறகு அதிக காரம் மற்றும் அதிக எண்ணெய் உள்ள பொருட்களை நாம் சாப்பிடுவது ஏப்பம் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒரு நாளைக்கு அதிக டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிக ஏப்பம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு சரியான தூக்கமின்மை, பதட்டம்  இதுபோன்ற காரணத்தினாலும் தொடர்ந்து ஏப்பம் வருகிறது.

அதனால் எப்போதும் நீங்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

விக்கலை உடனடியாக நிறுத்துவது எப்படி தெரியுமா.?

தொடர் ஏப்பம் குணமாக:

தினமும் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் பொறுமை என்பது மிகவும் அவசியம். நீங்கள் சாப்பாட்டை பொறுமையாக சாப்பிடுவதன் மூலம் தொடர் ஏப்பம் வருவதை குறைக்க முடியும்.

அதுபோல அதிக அளவு சாப்பாட்டினை ஒரு நேரத்தில் சாப்பிடாமல் குறைந்த அளவு சாப்பாட்டினை பிரித்து சாப்பிடுவதன் மூலம் இந்த ஏப்பத்தில் இருந்து விரைவில் குணம் அடைய முடியும்.

நீங்கள் சாப்பிடும் போது பேசுவது மற்றும் சிரிப்பதையும் குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது ஏப்பம் வராமல் தடுப்பதற்கு நல்ல பலனை தருகிறது.

வீட்டில் அல்லது வெளியில் செல்லும் போது அதிக காற்று உள்ள குளிர் பானங்கள் மற்றும் ஸ்ட்ரா பயன்படுத்தி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மூலம் தொடர்ந்து ஏப்பம் வருவதில் இருந்து விடுபட முடியும்.

சாப்பிட்ட உடனே படுத்து தூங்காமல் சிறிது நேரம் நடந்து பிறகு தான் தூங்க வேண்டும். இப்படி செய்வது ஏப்பம் வருவதை குறைக்க முடியும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil