வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள் | Homeopathy Treatment in Tamil | ஹோமியோபதி பற்றிய தகவல்

Updated On: October 11, 2021 12:41 PM
Follow Us:
Homeopathy Treatment in Tamil
---Advertisement---
Advertisement

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் | Homeopathy Maruthuvam in Tamil

ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்: ஹோமியோபதி மருத்துவம் என்பது துணை மற்றும் மருத்துவ முறையின் ஒரு பிரிவு ஆகும்.  இந்த ஹோமியோபதி மருத்துவ முறையானது 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. இந்த மருத்துவ முறையில் பல இயற்கை கலந்த பொருட்கள் அடங்கியுள்ளது. இந்த பதிவில் ஹோமியோபதியின் அளவீடுகள் பற்றி, அதன் கொள்கைகள், இந்த மருத்துவத்தை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம், ஹோமியோபதி தோன்றிய வரலாறு இது போன்ற பல தகவலை படித்து தெரிந்துகொள்ளுவோம் வாங்க..!

20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்

ஹோமியோபதியின் ஆற்றல் அளவு:

ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்

ஒரு பொருளை நாம் எந்த அளவிற்கு நீர்த்துப்போக செய்கிறோமோ அந்த அளவிற்கு அது சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு பொருளை நீர்த்துப்போக செய்வதும், அதை கிளர்ச்சியுற செய்வதன் மூலமும், அதன் நோய் தீர்க்கும் சக்தியை அதிகரிக்கலாம் என்பதே இதன் அர்த்தமாம். ஹோமியாபதி மருத்துவத்தில் அதன் ஆற்றல் அளவீடு எக்ஸ் அல்லது சி என்று குறிப்பிடப்படுகிறது.

எக்ஸ் (X): ஒரு பங்கு மூலப்பொருளுடன் 2 பங்கு அளவிற்கு நீர் சேர்க்க வேண்டும். அதாவது, 1X கரைசலில், ஒரு பங்கு மூலப்பொருளுடன் 9 பங்கு தண்ணீர் இருக்கும்.

சி: 1C கரைசலில், ஒரு பங்கு மூலப்பொருளுடன் 99 பங்கு தண்ணீர் இருக்கும். இதில் கரைசலில் உள்ள அடர்த்திக்கு ஏற்ப அதன் ஆற்றல் / சக்தியின் வீரியம் மாற்றம் அடையும்.

கொள்கைகள்:

 homeopathy treatment in tamilஹோமியோபதி மருத்துவ துறையில் மூன்று கொள்கைகள் இருக்கிறது.

  1. ஒற்றுமைகளின் விதி
  2. ஒற்றை தீர்வு கொள்கை
  3. குறைந்தபட்ச அளவு கொள்கை

ஒற்றுமைகளின் விதி: குணப்படுத்துதல் போன்றது என்ற அடிப்படையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒற்றை தீர்வு கொள்கை: ஏதோ ஒரு நோயால் உடல் பாதிப்படைந்தவர், அவருடைய உணர்ச்சி மற்றும் மனதில் உள்ள அறிகுறிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று இந்த கொள்கை எடுத்துரைக்கிறது.

குறைந்தபட்ச அளவு கொள்கை: நோயாளிகளுக்கு ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் மட்டுமே தரப்படும் மருந்து, பின் அந்த நோய்களின் தன்மைக்கேற்ப மருந்தின் அளவினை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பதை இந்த கொள்கை அனுமதிக்கிறது.

50 வகை பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..!

ஹோமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்தவர்:

ஹோமியோபதி வரலாறுஜெர்மனி நாட்டை சேர்ந்த சாமுவேல் ஹேக்னேமேன் என்பவர் தான் 1807-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்தார். சாமுவேல் ஹேக்னேமேன் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த போது, சின்கோனா பட்டையில் உள்ள குயினோன் என்ற மருந்தை சுயமாக தம் உடலில் செலுத்தி அதற்கு தீர்வையும் கண்டார். அடுத்ததாக மலேரியா நோய்க்கான அறிகுறிகள் தோன்றிய உடனேயே, குணப்படுத்துவதற்கு இந்த மருத்துவ முறையை தோற்றுவித்து அதற்கு தீர்வும் கண்டார்.

ஹோமியோபதியின் நன்மைகள்:

ஹோமியோபதியின் நன்மைகள் 2018-ம் ஆண்டில் ஹோமியோபதி மருந்துகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 124 புற்றுநோய் நோயாளிகளிடம் 75% புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் கிடைத்தது என்பது ஆய்வில் தெரிந்தது. புற்றுநோய்க்கான ஹோமியோபதி மருந்து பெண்களுக்கு மட்டும் பயனளிப்பதாக இருந்தது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மருந்து நல்ல நிவாரணமாக இருந்துள்ளது.

ஹோமியோபதி பக்கவிளைவுகள்:

ஹோமியோபதி பக்கவிளைவுகள்ஹோமியோபதி மருந்தானது மிக சிறிய அளவு தான். ஆனால் உடலுக்கு அது மிகவும் அதிக நன்மையை கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள், நோய் முற்றி போன  நிலையில் இருப்பவர்கள், ஹோமியோபதி சிகிச்சை பெறுவதற்கு முன் மருத்துவரின் தகுந்த ஆலோசனைகளை பெற வேண்டும்.

ஹோமியோபதி சிகிச்சையின் அபாயம்:

ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை படியே, நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது இருக்க வேண்டும்.

கீமோ தெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை மேற்கொள்ளும் போது, அதிகமாக வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் பயன்பாடு, புற்றுநோய் சிகிச்சையில் அதிக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை இந்நேரத்தில் யாரும் மறந்துவிடக் கூடாது. அதேநிலை தான் ஹோமியோபதி மருத்துவத்திடம் இருக்கிறது.

வேறு மருத்துவ முறைகளுடன் ஹோமியோபதியின் வேறுபாடுகள்:

ஹோமியோபதிமருத்துவமானது, அலோபதி என்று சொல்லக்கூடிய ஆங்கில வழி மருத்துவ முறைகளோடு சேர்த்து பார்க்கும்போது மொத்தமாக வேறுபாடு அடைகிறது.  கீமோதெரபி, அறுவை சிகிச்சை போன்ற விவகாரங்கள், ஹோமியோபதி மருத்துவ முறையில் இல்லை.

நோய் மற்றும் அந்த நோய்க்கான அறிகுறிகளை மட்டுமே, ஹோமியோபதி மருத்துவ முறை தொடர்ந்து குணப்படுத்தி வருவதால், இது ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறது. வேறு மருத்துவ முறைகளை ஹோமியோபதியுடன் ஒப்பிடும் போது, ஹோமியோபதி மருத்துவம் நீண்ட காலம் நீடித்து பயனளிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now