வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

How to Drink Hot Water for Weight Loss in Tamil

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்

ஹாய் பிரண்ட்ஸ்.. இன்றைய பதிவு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல டிப்ஸினை ட்ரை செய்து கொண்டிருக்கும் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு ஒரே ஒரு டிப்ஸ் தான் நான் உங்களுக்கு இந்த பதிவில் சொல்ல போறான்.. அதனை தெரிந்து கொள்ள முழுமையாக இந்த பதிவை படியுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் உடல் எடையை குறைக்க வெறும் வெந்நீர் மட்டும் போதுங்க.. மிக எளிதாக உங்கள் தொப்பை மற்றும் உடல் எடை இவ்விரண்டையும் குறைத்துவிடலாம். சரி வாங்க வெந்நீரை எப்படி குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா? – How to Drink Hot Water for Weight Loss in Tamil:

udal edai kuraiya venneer

தங்கள் உடல் எடையை குறைக்க ஒரு நாளுக்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு விஷயம் தான். அதாவது 8 கிளாஸ் வெந்நீரை நீங்கள் அருந்தவேண்டும். இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 8 கிளாஸ் வெந்நீரையும் நீங்கள் ஒரேதறியாக குடிக்க கூடாது. இதற்கென்று சில முறைகள் இருக்கிறது அதனை இப்பொழுது ஒவ்வொன்றாக படிக்கலாம் வாங்க.

காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் 200ml முதல் 250ml வரை வெந்நீரை குடிக்கலாம். இந்த வெந்நீர் அதிக சூடாக்கவும் இருக்க கூடாது, அதேபோல் ரொம்பவும் மிதமானதாகவும் இருக்க கூடாது நீங்கள் டீ, காபி அருந்துவீர்கள் என்றால் அந்த சூட்டிற்கு வெந்நீர் இருந்தால் போதும்.

அதன்பிறகு நீங்கள் காலை உணவு உண்பதற்கு முன் அதாவது 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும். அதேபோல் காலை உணவு சாப்பிட்ட பிறகு 30 நிமிடம் கழித்து ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும். இவ்வாறு மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கு 1/2 நேரத்திற்கு முன் மற்றும் பின் இரண்டு வேளையும் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும். பின் இரவு உறங்க செல்வதற்கு முன் ஒரு முறை வெந்நீர் அருந்துங்கள். இவ்வாறு அருந்துவதால் என்ன நன்மை என்று நினைப்பீர்கள்.

நாம் இப்படி வெந்நீர் அருந்துவதால் நமது உடல் அதிகம் ஹீட் ஆகும். இந்த ஹீட்டை குறைப்பதற்கு. அதாவது நமது உடலின் பொதுவான டெம்பரேச்சர் (Temperature) அளவை கொண்டு வருவதற்கு. நம் உடல் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இதன் காரணமாக நமது உடலில் மெட்டபாலிசம் (metabolism) அதிகரிக்கிறது. இதன் காரணமாக தான் நம் உடல் எடை வேகமாக குறைக்க உதவி செய்கிறது வெந்நீர். ஆகவே வெந்நீரை தினமும் அருந்துங்கள் உங்கள் உடல் எடையை மிக எளிதாக குறைக்க வழிவகுக்கும்.

குறிப்பு:

எப்பொழுதும் வெந்நீரை நின்று கொண்டு குடிக்க கூடாது. அது நம் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தலாம். ஆக கீழே அமர்ந்து சம்மணமிட்டு அருந்துங்கள் இவ்வாறு அருந்தும் முறை தான் மிக சிறந்து. அப்பொழுது தான் நமது உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வேயேற்ற எந்த ஒரு இடையூறுகளும் ஏற்படாது.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்:

hot water

1 சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையும்.

2 அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

3 நாம் தினமும் வெந்நீர் அருந்துவதினால் நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

4 இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

5 மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

6 தினமும் நீங்கள் வெந்நீர் அருந்துவதினால் தங்களது முதுமை பருவத்தை ரொம்ப தூரம் தள்ளி போடமுடியும்.

7 வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

8 அடிக்கடி நாம் வெந்நீர் அருந்துவதினால் கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்.

9 தினந்தோறும் வெந்நீர் அருந்துவத்தினால் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil