இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் இலுப்பை எண்ணெயில் நிறைந்துள்ள ஏராளமான பயன்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த இலுப்பை எண்ணெய்கள் பல மருத்துவ குணங்களுக்கும் உதவியாக இருக்கிறது, இந்த இலுப்பை எண்ணெய்கள் ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா போன்ற இடங்களிலும் தமிழ் நாட்டில் தஞ்சை, சேலம், வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் இவற்றின் ஏராளமான பயன்களை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ரோஸ்மேரி எண்ணெய் பயன்கள் |
இலுப்பை எண்ணெய் மருத்துவ பயன்கள்:
இந்த இலுப்பை எண்ணெய்கள் இன்னும் சிலரது வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி சருமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கும், உடல் வலிகளுக்கும் ஏராளமான நன்மைகளையும் தருகிறது. அதோடு மட்டுமல்லலாமல் கண் பிரச்சனைகள், காசநோய், மலசிக்கல், விரை வீக்கம், வயிற்றுவலி, நீரழிவு நோய் போன்ற பிரச்சனைகளும் இந்த இலுப்பை எண்ணெய் மருந்தாக இருக்கிறது. மேலும் இலுப்பை எண்ணெயின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.
இலுப்பை எண்ணெய் மருத்துவ குணங்கள்:
பூச்சிக்கடி நீங்க | Poochi Kadi Marunthu:
பூச்சிக்கடி பிரச்சனைகள் நீங்க இலுப்பை எண்ணெய் மிகவும் முக்கியமான மருந்தாக இருக்கிறது. பூச்சிக்கடியினால் உடலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு நிறத்தில் காணப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த இலுப்பை எண்ணெய்யை கொண்டு பூச்சி கடித்த இடத்தில் தடவி வருவதால் பூச்சிக்கடி பிரச்சனைகள் நீங்கிவிடும்.
சரும பராமரிப்பு:
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வறண்ட சருமம், முகத்தில் அலர்ஜி, தழும்புகள் போன்ற பிரச்சனைகளினால் இன்று பலரும் அவதிப்படுகிறார்கள், இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு இலுப்பை எண்ணெய் தான். இதனை தினமும் சருமத்தில் தேய்த்து வந்தால் அழகான முக பொலிவையும், மென்மையான சருமகளையும் பெறலாம்.
மூட்டுவலி குணமாக நீங்க:
உடலுக்குள் நோய் கிருமிகளின் தாக்கங்கள் இருந்தால் உடலில் சில இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன, பொதுவாகவே சிலருக்கு கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும், இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இலுப்பை எண்ணெய்யை சூடுபடுத்தி கொண்டு கொஞ்சம் அந்த சூட்டின் வெது வெதுப்புடன் தடவி வருவதால் மூட்டு வலி கைகால் வலி போன்ற பிரச்சனைகள் குணமாகிவிடும்.
கொசுவை விரட்ட என்ன வழி:
கொசுக்கடி தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் வீட்டில் கொசுவர்த்தி, புகை மூட்டம், குட் நைட் லிக்கியுட் என்று அதிகமாக பயன்படுத்தி இதனை சுவாசிப்பதால் பலவிதமான பிரச்சனைகளையும் சந்தித்திருப்போம், எனவே கொசுக்கடியினால் அவதிப்படுபவர்கள் இலுப்பை எண்ணெயை எரித்து பயன்படுத்துவதால் கொசுக்களின் தொல்லை முழுவதுமாக இருக்காது.
தலைமுடி பிரச்சனைகள் நீங்க:
தலைமுடி முடி பிரச்சனைகளான முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி வளர்ச்சி அதிகமாக இலுப்பை எண்ணெயில் ஒரு துளி கற்பூர எண்ணெயை கலந்து கொண்டு உச்ச தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வர வேண்டும், இதனை வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் செய்து வருவதால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
பல் வலி பிரச்சனை நீங்க:
பல்களில் ஏற்படும் இரத்த கசிவு, ஈரல் வீக்கம், சொத்தை பல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இலுப்பை மரத்தின் பட்டைகளை சாறு பிழிந்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை உட்கொள்ளும் பொழுது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |