கழுத்து வலி குணமாக என்ன செய்ய வேண்டும் | Kaluthu Vali Treatment in Tamil
கழுத்து வலி என்பது அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைதான். கழுத்து வலியானது தோள்பட்டை மற்றும் கழுத்து சேரும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும். கழுத்து வலி வந்தால் நம்மால் எந்த ஒரு வேலையினையும் முழுமையாக செய்ய முடியாது. எல்லா வேலைகளும் பாதியாகவே நிற்கும். பெரும்பாலும் கழுத்து வலியானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் சந்திக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி கழுத்து வலியை குணப்படுத்தக்கூடிய தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. வாங்க நண்பர்களே கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு சில அருமையான டிப்ஸ்களை பார்க்கலாம்.
கழுத்து வலி வர காரணம்:
- கழுத்து வலியானது நாம் உறங்கும் போது சரியாக படுக்காமல் இருந்தாலோ அதுபோன்று சரியான நிலையில் அமராமல் இருந்தாலோ கழுத்து வலி ஏற்படும்.
- தலையில், கழுத்து பகுதிகளில் ஏதேனும் அடிபட்ட காயம் இருந்தாலோ கழுத்து வலி வரும்.
- மேலும் அளவிற்கு அதிகமான மன அழுத்தம், பல மணிநேரம் குனிந்த படியே படிப்பதனால் கூட கழுத்து வலி ஏற்படலாம்.
கழுத்து வலி அறிகுறிகள்:
- கழுத்து மற்றும் கழுத்தை சுற்றி விறைப்பு ஏற்படும்.
- கழுத்தில் ஊசி குத்துவது போன்று பயங்கரமாக வலி ஏற்படும்.
- எந்த பொருளையும் தூக்க முடியாத நிலை, கழுத்து வலியுடன் தலைவலியும் ஏற்பட்டால் கழுத்து வலிக்கான அறிகுறியாகும்.
கழுத்து வலி குணமாக:
- ஒரு சிறிய டவலில் ஐஸ் கட்டியை சுற்றி வைத்து கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் 2 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால் கழுத்து வலி குணமாகும்.
- கழுத்து வலி நீங்க நல்லெண்ணையில் நொச்சி இலையை சேர்த்து நன்றாக காய்ச்சி தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு வெந்நீரில் குளித்து வர கழுத்து வலி நீங்கும்.
- இரவு நேரத்தில் கண்டதிப்பிலியை நன்றாக பொடி செய்து அவற்றில் பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்து வலி உடனடியாக குறைந்துவிடும்.
Neck Pain Treatment in Tamil:
- முதலில் 2 அல்லது 3 கப் அளவு எப்சம் உப்பினை எடுத்துக்கொள்ளவும். அந்த உப்பினை மெல்லிய துணியில் கட்ட வேண்டும்.
- பின்பு ஒரு பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கட்டிய உப்புவை போட வேண்டும்.
- அதன் பிறகு அந்த உப்பு நீரில் 1 மணி நேரம் உட்கார வேண்டும். தினமும் 1 மணிநேரம் இப்படி உட்கார்ந்தால் கழுத்து வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கழுத்து வலி குணமாக என்ன செய்ய வேண்டும்:
- பௌலில் 2 டீஸ்பூன் அளவிற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் தண்ணீர் சம அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு ஒரு பேப்பர் டவலை எடுத்து, அதில் நனைத்து, கழுத்து வலி உள்ள இடத்தில் 1-2 மணிநேரம் ஊறவைக்கவும்
- இல்லாவிட்டால் பாத் டப்பில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, வெதுவெதுப்பான நீரை நிரப்பி, 1 மணிநேரம் அதனுள் கழுத்து மூழ்கும் படி அமர வேண்டும். இந்த டிப்ஸை பாலோ செய்தால் கழுத்து வலி இருக்காது.