ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Food For Memory Power Increase..!
Indian Food To Increase Memory Power: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகள் பற்றித்தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். நமது உடலில் மிக அற்புதமான பகுதி என்று சொல்லக்கூடியது நம் மூளை பகுதியே ஆகும். மூளையானது வேகமாக செயல்படுவதற்கு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவு வகையானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் போது மூளை பகுதியானது நன்கு ஆரோக்கியமாக செயல்படும். மேலும் சிந்திக்கும் திறனையும், ஞாபக சக்தியும் அதிகரிக்க செய்யும். இந்த பதிவில் நமது உடலுக்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவி புரியும் வகையில் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு உணவு வகைகள் சிலவற்றை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..! |
கொழுப்பு நிறைந்த மீன்:
நம்முடைய மூளை வளர்ச்சிக்கு தேவையான உணவு பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது கொழுப்பு நிறைந்த மீன். மீன்களில் ஒமேகா 3(Omega), நல்ல கொழுப்புகள், Fatty Acids நிறைய நிறைந்துள்ளது. நமது மூளை 60% கொழுப்புகளால் ஆனது.
ஒமேகா 3 நம் மூளை நரம்புகள் உருவாகுவதற்கும், சரியாக செயல்பாட்டுடன் இருப்பதற்கும், நியாபக சக்தி அதிகரிக்க செய்வதற்கும் மிகவும் முக்கியமானது. அதனால் ஒமேகா 3 அதிகமாக உள்ள மீன்களை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நியாபக சக்தி அதிகரிக்க கூடும்.
ஞாபக திறன் அதிகரிக்கும் வால்நட்ஸ்:
வால்நட்ஸ் பார்ப்பதற்கு மடிந்து நம் மூளை பகுதி போன்றே இருக்கும். வால்நட்ஸில் omega, DHA அதிகமாக உள்ளது. இந்த சத்துக்களானது நம் மறதியை போக்கி நியாபக சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் வால்நட் அல்சைமர்(alzheimer) என்று சொல்லக்கூடிய மூளை சம்மந்த நோய்களையும், இதய சம்மந்த நோய்களையும் வராமல் தடுக்கும்.
வால்நட்டில் இருக்கக்கூடிய DHA வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் கூட மிகவும் பயனுள்ளது இந்த வால்நட்ஸ். தினமும் 5 வால்நட்ஸை எடுத்துக்கொண்டால் மூளை வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் உடல் வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
அதிக வைட்டமின் நிறைந்த முட்டை:
மூளை வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட பல வைட்டமின் சத்துக்கள் முட்டையில் அடங்கியுள்ளது. முட்டையில் வைட்டமின் பி 6, பி 12 முக்கியமாக கொலின் என்ற மைக்ரோ நியூட்ரியண்ட் சத்துக்கள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி தான் நம் உடலுக்கு தேவையான அசிட்டில் கொலினை உருவாக்கம் செய்கிறது.
இந்த அசிட்டில் கொலினானது நம்முடைய நியாபக சக்திக்கு மிகவும் நல்லது. கொலின் என்ற சத்து நாம் முட்டை சாப்பிடுவதன் மூலமாக எளிமையாக கிடைக்கிறது. கொலின் சத்தானது முட்டையின் கருவில் தான் அதிகளவு நிறைந்துள்ளது. முட்டையில் இருக்கக்கூடிய பி 12 மூளையில் இருக்கக்கூடிய ரசாயன மாற்றங்களை சரி செய்வதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நியாபக சக்தி பெறுவதற்கு தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்..! கால்சியம் குறைபாடே இருக்காது..! White Sesame Seeds Benefits..! |
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பூசணி விதை:
பூசணி விதைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்(Anti Oxidants) உள்ளது. பூசணி விதை நம் உடம்பு மற்றும் மூளை பகுதிகளில் உருவாகின்ற Free Radicals என்று சொல்லக்கூடிய நச்சு பொருள்களை தடுத்து நிறுத்தும். மேலும் மூளை பகுதிக்கு தேவையான Micro Nutrients(Iron, Zinc, copper) அதிகமாக பூசணி விதைகளில் இருக்கிறது.
இந்த மைக்ரோ நியூட்ரியண்ட் சத்தானது மன அழுத்தம், அல்ஸைமர்ஸ் போன்ற நோய்களை வராமல் கட்டுப்படுத்தும். குறிப்பாக மெக்னிசியம் சத்தானது ஒரு விஷயங்களை விரைவில் கற்றுக்கொள்வதற்கும், சரியாக நியாபகம் வைத்து கொள்வதற்கும் மிகவும் முக்கியம்.
சத்துக்கள் நிறைந்த பால்:
பாலில் அதிகமாக ப்ரோடீன் மற்றும் வைட்டமின் சத்துக்கள் இருக்கிறது. ப்ரோடீன் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நம் மூளை பகுதிக்கு தகவல் உடனே சென்றடைவதற்கு மிகவும் உதவியாக உள்ளது. பால் குடிப்பதால் மூளை நோய்கள் வராமல் தடுக்கலாம். பாலானது உங்களுடைய நியாபக சக்தியை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள்:
நம் முன்னோர்கள் சமையலில் அதிகளவு மஞ்சள் பயன்படுத்தியதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மஞ்சள் கிருமி நாசினி மட்டுமல்ல நம்முடைய நியாபக சக்தியை அதிகரிப்பதற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். மஞ்சள் நம் உடலில் செரடோனின் என்று சொல்லக்கூடிய கெமிக்கலை சுரக்க வைக்கிறது.
மேலும் மஞ்சள் நம் மூளையில் புது செல்கள் வளருவதற்கு மிகவும் உதவியாக உள்ளது. மஞ்சளை அதிகமாக நம் உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ரொம்பவே நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Immunity boosting foods..! |
ஞாபக சக்தியை அதிகரிக்க கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலையில் அதிக ப்ரோடீன், மெக்னீசியம் மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரெட்ஸ் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் உள்ள ப்ரோடீன் மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரெட்ஸ் மூளை பகுதியானது சுறுசுறுப்பாக இருக்கவும், மூளைக்கு இரத்தம் சரியாக செல்வதற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
ஞாபக திறனுக்கு க்ரீன் டீ:
க்ரீன் டீயில் கஃபின், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. கஃபின் சத்தானது உங்களுடைய மூளையினை எப்போதும் விழிப்போடு இருப்பதற்கு உதவும். முக்கியமான நேரங்களில் அதிக பதட்ட படாமல் இருக்க எல்தியாமின் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் க்ரீன் டீ தேவையில்லாத கொழுப்புகளை குறைத்துவிடும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் ஆரஞ்ச் ஜுஸ்:
ஆரஞ்ச் ஜுஸ் குடிப்பதனால் உங்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்கக்கூடும்.
பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்..! |
ஞாபக சக்தி அதிகரிக்க சாக்லேட்:
சாக்லேட் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. Dark Chocolate, cocoa powder-ல் அதிக கஃபின், Flavonaids, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக நிறைந்துள்ளது. நீங்கள் ஏதேனும் புதிதாக கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களை ஃபிளாவனாய்டுகள்(Flavonaids) கவனமாக கற்றுக்கொள்வதற்கும், நியாபகத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சாக்லேட் மன அழுத்தத்தினையும் குறைக்கும்.
ஞாபக சக்தியை அதிகப்படுத்த நட்ஸ்:
மூளைக்கு தேவையான நியூட்ரியண்ட்ஸ் வால்நட்ஸில் மட்டுமல்லாமல் பாதாம், hazal Nut, நிலக்கடலை மற்றும் நட்ஸ் வகைகளில் மூளைக்கு தேவையான வைட்டமின் இ சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் இ சத்தானது நம்முடைய முதுமை காலங்களில் வருகின்ற ஞாபக மறதி பிரச்சனையை தீர்க்கும். வேர்க்கடலையில் நிறைய நியாசின் என்ற சத்துக்கள் உள்ளது.
நியாசின் சத்து மூளை பகுதி வேகமாக செயல்படுவதற்கும், அல்சைமர் என்ற நோய் வராமல் தடுப்பதற்கும் மிக உதவியாக உள்ளது. ஞாபக சக்தி அதிகரிக்க செய்வதுடன், வேகமாக செயல்படுவதற்கு நட்ஸ் சார்ந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
மூளை பகுதியை பாதுகாக்கும் ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலில் மூளை பகுதியை பாதுகாக்கக்கூடிய பாலிபெனால்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. மேலும் ஆலிவ் ஆயிலில் மூளைக்கு தேவையான வைட்டமின் இ, கே உள்ளது. வைட்டமின் இ மற்றும் கே நமது மூளை பகுதியின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும். ஆலிவ் ஆயில் நம் மன அழுத்தத்தினையும் குறைக்கும். தவறாமல் முடிந்த அளவுக்கு நம் உணவு முறைகளில் ஆலிவ் எண்ணெயினை சேர்த்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.
மேல் கூறிய அனைத்து உணவுகளையும் சரியான முறையில் சேர்த்துக்கொண்டால் உங்களுடைய மூளை ஆரோக்கியத்திற்கும், சரியாக செயல்படுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |