வாய்ப்புண் குணமாக இயற்கை மருத்துவம் | How to Cure Mouth Ulcer in One Day in Tamil
Mouth Ulcer Home Remedy in Tamil:- இப்போதெல்லாம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் புண். இந்த வாய் புண் ஒருவருக்கு வந்துடிச்சின்னா சரியாக உணவருந்த முடியாது, சரியாக பல் துலக்க முடியாது, ஏன் தண்ணீர் கூட அருந்தமுடியாது. இந்த வாய் புண் வந்துடிச்சின்னா ஏகப்பட்ட பிரச்னையை நாம சந்திக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாகவே பலர் இந்த வாய் புண் சரியாகணும்னு மெடிக்கல் ஷாப்ல விக்கப்படுற கண்ட கண்ட மாத்திரை மற்றும் ஆயில்மென்ட் போன்றவற்றை பயன்படுத்துவாங்க. இதையெல்லாம் வாங்கி நீங்க பயன்படுத்துனீங்கனா உங்களுக்கு மேலும் மேலும் பிரச்சனை அதிகரிக்குமே தவிர வாய் புண் குணமாகாது.
சரி இந்த பதிவில் வாய் புண் குணமாக இயற்கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதையும், வாய்ப்புண் வர காரணம் என்ன?, வாய்ப்புண் அறிகுறிகள் போன்ற விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வாய் புண் குணமாக மருந்து – Mouth Ulcer Home Remedy in Tamil
வாய் புண் எதனால் வருகிறது? – வாய்ப்புண் வர காரணம் – Mouth Ulcer Reasons:
பொதுவாக வாய்ப்புண் என்பது நமது உதடு, நாக்கு மற்றும் கன்னத்தின் உள்பக்கம் போன்ற இடங்களில் ஏற்படும். சரி இந்த வாய்ப்புண் வர காரணம் என்ன என்பதை பற்றி இப்பொழுது அறியலாமா?
உடலில் பித்தம் அதிகரித்தால் வாய்ப்புண் ஏற்படும், உடல் சூடு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் B குறைபாடு மற்றும் ஜீரண கோளாறு போன்ற காரணங்களினால் நமக்கு வாய்ப்புண் ஏற்படுகிறது. இந்த வாய்ப்புண் என்பது நமக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டும் அதிக தொந்தரவை கொடுக்கும், ஆனால் இந்த பிரச்சனை வெகு நாட்களாக ஒருவருக்கு இருந்து வருகிறது என்றால் அது வாய் கேன்சர் இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே வெகு நாளாக தங்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகின்றது என்றால் நேரத்தை தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
வயிற்று புண் மற்றும் குடல் புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!! |
வாய்ப்புண் அறிகுறிகள் – Mouth Ulcer Symptoms in Tamil:
வாய், நாக்கு, கன்னத்தின் உள்பகுதியில் புண் ஏற்படும், தண்ணீர் அல்லது உணவு அருந்தினாலோ வாய் பகுதியில் எரிச்சல் உணர்வு உண்டாகும். அதேபோல் தொண்டை பகுதியில் வலி ஏற்படும் இவையெல்லாம் வாய்புண் இருப்பதற்கான அறிகுறியாகும்.
வாய்ப்புண் குணமாக இயற்கை மருத்துவம் | Mouth Ulcer Home Remedy:-
வாய் புண் ஒரே நாளில் குணமாக சில இயற்கை வைத்தியம் (how to cure mouth ulcer in one day in tamil) பற்றி தெரிந்துகொள்ளலாமா?
வாய் புண் குணமாக மருந்து – தண்ணீர் (Mouth Ulcer Home Remedy):
vaai pun treatment in tamil:- உடலில் நீர்ச்சத்து குறைகின்றது என்றால் இது போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தி வந்தாலே போதும் இந்த வாய் புண் பிரச்சனை குணமாகும். அதேபோல் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். அதேபோல் இளநீர் அருந்தலாம் இவையெல்லாம் வாய் புண் குணமாக ஒரு சிறந்த மருந்தாகும்.
வாய்ப்புண் பாட்டி வைத்தியம் – வெண்ணை மற்றும் தேன் மருத்துவம் (Mouth Ulcer Home Remedy):
வாய் புண் பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டவர்கள் தேன் அல்லது வெண்ணையை புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து வர, கூடிய விரைவில் புண் குணமாகும். அதேபோல் பாலில் தேனை சிறிதளவு கலந்து தொடர்ந்து அருந்தி வர வாய் புண் குணமாகும்.
தொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..! |
வாய்ப்புண் பாட்டி வைத்தியம் – தேங்காய் பால் (Naaku pun treatment in tamil):-
தேங்காய் பால் அல்சர் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் இந்த தேங்காய் பால் வாய் புண் குணமாக ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. எனவே வாய்ப்புண் குணமாக தொடர்து தேங்காய் பாலினை அருந்தி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வாய்ப்புண் பாட்டி வைத்தியம் – தேங்காய் எண்ணெய் (vaai pun treatment in tamil):
வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இந்த கலவையை புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர வாய் புண் சரியாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |