ஒரே வாரத்தில் உடல் எடை குறைய | One Week Weight Loss Drink in Tamil
மனிதர்களை அதிகமாக தொந்தரவு செய்வது அதிக எடை தான். இந்த அதிக எடையினால் பல நேரங்களில் கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள். நிறைய வகையான ட்ரஸ் போட முடியாமலும் இருப்பீர்கள். சில நேரங்களில் பலர் உங்களை கிண்டல் செய்து இருப்பார்கள். அது கஷ்டமாக இருக்கும்.
இதனால் உங்கள் எடையை குறைக்க முடிவு செய்து நிறைய உடற்பயிற்சி மேற்கொள்வீர்கள். ஆனால் இதெல்லாம் வீட்டில் உள்ளவர்களுக்கு சரியாக இருக்கும். வேலை பார்பவர்களுக்கு சரி வராது அதற்கான நேரமும் இருக்காது. ஆகவே வீட்டில் சிம்பிளா எப்படி உடல் எடையை குறைப்பது என்று தெளிவாக இந்த பதிவில் பதிவிட போகிறேன். வாங்க ஒரே வாரத்தில் எப்படி உடல் எடையை குறைப்பது என்று தெரிந்து கொள்வோம்..!
One Week Weight Loss Drink in Tamil:
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை காய் – 1
- 1 எலுமிச்சை – சாறு
- இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 லிட்டர்
- பட்டை – 1
- மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
ஸ்டேப் : 1
- முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் காய் எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் : 2
- பின்பு அந்த எலுமிச்சை காயின் தோலை சிறிய துண்டாக கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் : 3
- அடுத்து முழு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை அப்படியே கட் செய்து கொள்ளவும். அதனையும் அப்படியே வைக்கவும்.
ஸ்டேப் : 4
- பின்பு இஞ்சியை எடுத்து அதனை சிறிய துகள் போல் சீவிக் கொள்ளவும். அது 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் : 5
- இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் 1 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
ஸ்டேப் : 6
- அடுத்து அதில் நாம் கட் செய்து வைத்த எலுமிச்சை காய் தோல் மற்றும் பழம் இரண்டையும் அதில் சேர்க்கவும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தேவையற்ற கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம்..!
ஸ்டேப் : 7
- அதனுடன் இஞ்சி 1 டேபிள் ஸ்பூன், பட்டை 1, மிளகு 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஸ்டேப் : 8
- ஓரளவு கொதித்த பின் அதை எடுத்து வடிகட்டி கொள்ளவும்.
ஸ்டேப் : 9
- வடிகட்டிய ஜூஸில் நாம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றவும். பின்பு அதில் தேன் சிறிதளவு சேர்த்து கலந்து குடிக்கவும். இப்படி தினமும் இந்த ஜூஸ் குடித்து வந்தால் 1 வாரத்தில் உடல் எடையை குறைக்க முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 5 நாளில் உங்கள் எடை குறைய உருளைக்கிழங்கு தான் சிறந்த வழி..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |