நீர்க்கட்டி கரைய என்ன செய்யலாம்..? pcod problem solution in tamil..!
pcod problem solution in tamil / நீர்க்கட்டி கரைய என்ன சாப்பிட வேண்டும்:- இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.
கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் |
சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.
நீர்க்கட்டி வர காரணம் & neer katti symptoms in tamil:
இந்நோய்க்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
சரி இங்கு கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் (pcod problem solution in tamil) என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண… |
நீர்க்கட்டி கரைய மருந்து..!
கருப்பை கட்டி கரைய கஷாயம்:-
இயற்கையான முறையில் இந்த கருப்பை நீர் கட்டி கரைய கஷாயம் தயார் செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
- காய்ந்த வேப்பிலை – 10
ர்ப்பப்பை கட்டிகள் கரைய கஷாயம் செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள். பின் அரைத்த பொடியினை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி 2 மணிநேரம் நன்றாக ஆறவிடவும். பின் கஷாயத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.
அருந்தும் முறை:
கர்ப்பப்பை கட்டிகள் கரைய தினமும் காலை உணவு உண்டபிறகு 1 மணி நேரம் கழித்து இந்த கஷாயத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அருந்தி வர வேண்டும்.
பயன்கள்:
இந்த கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வருவதினால், கருப்பை நீர் கட்டி கரைய ஆரம்பிக்கும், அதோடு மாதவிடாய் பிரச்சனை சிறக்கும், இதனால் கருத்தரிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளது.
வெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..! |
கழற்சிக்காய்
கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய கழற்சிக்காய் (Nickernut) ஒரு சிறந்த சித்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. இந்த கழற்சிக்காய் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்க கூடிய ஒரு சித்த மருத்துவ பொருளும் கூட. கருப்பை நீர்க்கட்டி கரைய இந்த கழற்சிக்காயினை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர வேண்டும்.
கழற்சிக்காய் சாப்பிடும் முறை:
ஒரு கழற்சிக்காயுடன் மூன்று மிளகு சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். பின் ஒரு கிளாஸ் மோர் அருந்தலாம். இவ்வாறு 48 நாட்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் கருப்பையில் உள்ள அனைத்து நீர் கட்டிகளும் கரைய ஆரம்பிக்கும்.
இந்த முறையை பின் பற்றும் பொழுது நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்:
தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது தினமும் 1/2 மணி நேரம் நடைபயிற்சியனை மேற்கொள்ளுங்கள்.
எண்ணெயால் செய்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து கொள்ளுதல் வேண்டும்.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் |
மலைவேம்பு இலைகள்:
மலைவேம்பு கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்யும் ஒரு சிறந்த தாவரமாகும். எனவே கருப்பை நீர் கட்டி கரையை மலைவேம்பு இலைகளை ஒரு கொத்து எடுத்து நன்றாக மைபோல் அரைத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருக வேண்டும்.
கர்ப்பப்பை கட்டிகள் கரைய மலைவேம்பு காசாயம் அருந்தும் முறை:
மாதவிடாய் வாய்ந்த முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் வரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த முறையை முதல் மூன்று மாதங்களை வரை தொடரலாம். இவ்வாறு செய்வதினால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.
இந்த கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயம் கருப்பை நீர் கட்டிகள் கரைய ஆரம்பிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |