பருக்களை நீக்குவதற்கு கிரீம் அப்ளை செய்தால் மட்டும் போதாது.இதையும் செய்யணும்

Advertisement

Pimples Remove Avoid Food

அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகளில் முகப்பரு பெரிய பிரச்சனை ஆக இருக்கிறது. பருவை நீக்குவதற்காக கடையில் விற்கும் பொருட்கள் மற்றும் இயற்கை முறையிலும் பயன்படுத்துகின்றனர். நீங்கள் என்ன வகையில் முகப்பருவை தடுக்க முயற்சித்தாலும் உணவு கட்டுப்பாடு இருந்தால் தான் நிரந்தரமாக முகப்பருவை நீக்க முடியும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் முகப்பரு ஏற்படுவதற்கான உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பால்:

Pimples Remove Avoid Food in tamil

நீங்கள் பால் அதிகமாக குடிக்கிறீர்கள் என்றால் முகப்பருக்கள் ஏற்படும். பால் முகப்பருவை ஏற்படுத்தும் ஹார்மோன்களை அதிகமாக சுரக்க வைத்து முகப்பருவை ஏற்படுத்தும். அதனால் முகப்பரு உள்ளவர்கள் பாலை குறைத்து கொள்வது நல்லது.

சர்க்கரை சார்ந்த உணவுகள்:

Pimples Remove Avoid Food in tamil

உங்களது உணவில் சோடா சார்ந்த உணவுகள், பிரட், கேக் மற்றும் குளிர் பானம் போன்ற உணவுகளை எடுத்து கொள்வது முகப்பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த உணவுகளில் சர்க்கரை மற்றும் ஹார்போஹைட்ரேட்டுகள் இரத்தத்தில் சேரும். மேலால் இவை தோலில் எண்ணெயை அதிகரிக்க கூடிய ஹார்மோன்களை பாதிக்கிறது.

சாக்லெட் அதிகமாக சாப்பிட்டாலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அதனால் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

முகப்பருவை நிரந்தரமாக நீக்குவதற்கு கற்றாழையை இப்படி பயன்படுத்தவும்

முகப்பருவை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

சால்மன் மீன்:

முகப்பருவை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் முகப்பருவை தடுக்க உதவுகின்றது. முகப்பருவுடன் தொடர்புடைய IGF-1 எனப்படும் உங்கள் உடல் உருவாக்கும் புரதத்தின் அளவையும் குறைக்க அவை உதவுகின்றன.

பாதாம்:

முகப்பருவை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 முகப்பருக்கள் உள்ளவர்கள் பெரும்பாலும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்ற குறைந்த அளவிலான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளார்கள். அதனால் பாதாம், வேர்க்கடலை போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.  

காலிபிளவர்:

முகப்பருவை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

காலிபிளவரில் ஹிஷ்டையின் என்ற அமினோ அமிலம் நிரம்பியுள்ளது. இவை புற ஊதா கதிர்களிலுருந்து வரும் தோல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

முகப்பரு வராமல் தடுக்கவும், பரு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிஞ்சுக்கோங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement