ரைஸ் பிரான் ஆயில் பயன்கள் | Rice Bran Oil Uses in Tamil
அனைவரின் வீட்டு சமையலிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது சமையல் எண்ணெய். எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் முழுமை அடையாது. எண்ணெயில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் தனி தனி ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. எண்ணெய் உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் சேர்த்து கொடுக்கிறது. அரிசி தவிட்டு எண்ணெய் என்பது தான் ‘ரைஸ் பிரான் ஆயில்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. வாங்க அரிசி தவிட்டு எண்ணெய் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..
ரோஸ்மேரி எண்ணெய் பயன்கள் |
கொழுப்பை கட்டுக்குள் வைக்க:
இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகமாக நிறைந்துள்ளது. நமது உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேருவதற்கு முக்கிய காரணம் அதிக எண்ணெய் உள்ள சமையல் பொருள்களை சாப்பிடுவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நமது உடலுக்கு ஆரோக்கியமும், தேவையில்லாத கொழுப்புகள் சேருவதை தடுப்பதற்கும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது இந்த ரைஸ் பிரான் ஆயில்.
புற்றுநோய் குணமாக:
இன்றைய சூழலில் பாகுபாடின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் ஒரே பிரச்சனை இந்த புற்றுநோய். புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. வைட்டமின் ஈ சத்துக்கள் இந்த ரைஸ் பிரான் ஆயிலில் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் பிரச்சனைக்கு இந்த எண்ணெய் நல்ல தீர்வினை கொடுக்கிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வைக்கிறது.
தேங்காய் எண்ணெய் நன்மைகள் |
டைப் 2 நீரிழிவு நோய் குணமாக:
சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக்கொண்டு தான் போகிறது. நமது உடல் ஆரோக்கியமானது சீராக இருப்பதற்கு சாப்பிடும் உணவுகளில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமாக இருப்பது சமையல் எண்ணெய். இந்த அரிசி தவிட்டு எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு தன்மை மேம்பட்டு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை குறைப்பதில் பெரும் பங்கினை எடுக்கிறது.
பக்க விளைவுகள்:
இந்த ரைஸ் பிரான் எண்ணெயில் அதிக நன்மை இருந்தாலும் சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிகமாக சேர்த்துக்கொள்வதினால் குடல் சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த எண்ணெயை தவிர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இது வயிற்றில் உள்ள கரு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
நல்லெண்ணெய் பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |